திருவிழாவில் வீதியில் இறங்கி குத்தாட்டம் போட்ட வடிவேல் சுரேஷ் எம்.பி

0
191

ஹப்புத்தளையில் இடம்பெற்ற திருவிழா ஒன்றில் பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஸ் பொதுமக்களுடன் கலந்து கொண்டு நடனமாடிய காணொளி தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.

மேலும், ஹப்புத்தளை தங்கமலை காட்டு மாரியம்மன் ஆலய வருடாந்த திருவிழாவின் தேர்பவணி நேற்றைய தினம் இடம்பெற்றது. அதில் கலந்துகொண்டபோதே அவர் பொதுமக்களுடன் நடனமாடியுள்ளார். மேலும், ஆலயத்தில் இடம்பெற்ற விசேட பூஜை வழிபாடுகளிலும் அவர் கலந்துகொண்டார்.

விசேட நிகழ்வொன்று ஹப்புத்தளையில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு திரும்பிய வேளையிலேயே இத்திருவிழாவில் இவர் கலந்துகொண்டு நடனமாடியுள்ளார்.