இலங்கையில் அழகிய நிலத்தடி உணவகம்!

0
166

கேகாலையில் தரை மட்டத்தில் இருந்து 124 மீற்றர் ஆழத்தில் போகல மினிரன் சுரங்கத்தில் உணவகம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.

குறித்த உணவகத்தில் ஒரே நேரத்தில் 15 பேர் உணவை பெற்றுக்கொள்வதற்கான வசதி காணப்படுகிறது.

மேலும் குறித்த உணவகம் போகல மினிரன் சுரங்கம் என்று அழைக்கப்படும் “விஜயபால மலலசேகர” சுரங்கத்தில்  அமைக்கப்பட்டுள்ளது.

இந்த மினிரன் சுரங்கத்தை பார்வையிட சிறப்பு அனுமதி பெற வேண்டும் என்பதோடு, 14 வயதுக்குட்பட்ட சிறுவர், சிறுமிகள் நுழைய அனுமதியில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

150 வருடங்களுக்கு மேலான பழமையான போகல மினிரன் சுரங்கத்திலிருந்து கிராஃபைட் ஏற்றுமதியானது இந்நாட்டிற்கு கணிசமான அந்நியச் செலாவணியை ஈட்டித் தந்துள்ளது.