70 மில்லியன் டொலர்களை அபகரிக்க முயன்ற பெண்; நேர்ந்த கதி

0
182

கனடாவில் 70 மில்லியன் டொலர்கள் லொத்தர் சீட்டு பரிசினை மோசடியான முறையில் அபகரிக்க முயன்ற பெண் மீது வழக்கு தொடரப்பட உள்ளது.

ஒன்றாரியோ மாகாணத்தை சேர்ந்த பெண் ஒருவரே இவ்வாறு பாரிய மோசடியை செய்ய முயற்சித்துள்ளார்.

33 வயதான நோர்த் பே பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு எதிராக இவ்வாறு குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

போலி ஆவணங்களை சமர்ப்பித்து மோசடி செய்ய முயற்சித்தார் என குறித்த பெண் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இந்த பாரிய நிதி மோசடியை மேற்கொள்ள முயற்சித்த பெண்ணை போலீசார் கைது செய்து பின்னர் பிணையில் விடுவித்துள்ளனர்.

கடந்த கடந்த 2022 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 28ஆம் திகதி 70 மில்லியன் டாலர் பணப்பரிசு சீட்டிலுப்பில் வென்றெடுக்கப்பட்டது.

எனினும்ம் ஓராண்டு காலம் வரையில் இந்த பரிசுத்தொகை எவராலும் உரிமை கோப்படவில்லை.

இது தொடர்பில் வெளியிடப்பட்ட பொது அறிவிப்புகளை தொடர்ந்து சுமார் 2700 பேர் இந்த பரிசுத் தொகை தமக்குரியது என உரிமை கோருகின்றனர் .

இவ்வாறு உரிமை கோரிய நபர்களில் பெண் ஒருவர் போலி ஆவணங்களை தயாரித்து மோசடியான முறையில் இந்த பரிசு பணத்தை அபகரிக்க முயற்சித்தார் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இந்த குற்றச்சாட்டு தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.