பிரித்தானியாவில் வேகமாக பரவி வரும் புதிய வகை கொரோனா!

0
243

பிரித்தானிய முழுவதும் Eris என்ற குறியீட்டுப் பெயருடன் EG.5.1 என அழைக்கப்படும் புதியவகை கொரோனா வேகமாக பரவி வருகின்ற நிலையில் மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

பிரித்தானியாவின் மோசமான காலநிலை காரணமாக அங்கு அதிக அளவிலான மக்களுக்கு தலைவலி, காய்ச்சல், மூக்கில் நீர்வடிதல் போன்ற அறிகுறிகள் தென்படுகின்றன.

இது அதிகமான மக்களிடம் வேகமாக பரவி வருவதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

இதையடுத்து பிரித்தானியாவின் சுகாதார பாதுகாப்பு முகவரகம் இது தொடர்பில் ஆராய்ந்த போது இது ஒமிக்ரோனின் மாறுபாடு அடைந்த வைரஸ் கிருமி என கண்டறியப்பட்டது.

இந்த வைரஸ் பிரித்தானியாவில் 7 பேரில் ஒருவருக்குப் பரவியிருப்பதாகவும், இதற்கு கிரேக்க தெய்வத்தின் பெயரான எரிஸ் என்ற பெயர் சூட்டப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.