முகநூல் காதலனை தேடி இந்தியாவுக்கு  பறந்து சென்ற இலங்கை தமிழ் யுவதி!

0
152

ஆந்திர பிரதேசத்தில் இருக்கும் தனது முகநூல் காதலுடன் வாழ்வதற்காக இலங்கையைச் சேர்ந்த இளம் யுவதி ஒருவர் இந்தியாவிற்கு சென்றுள்ளார்.

25 வயதான சிவகுமாரி விக்னேஷ்வரி என்ற யுவதி தனது 6 ஆண்டு கால முகநூல் காதலனான 28 வயதான லட்சுமணனை திருமணம் செய்து கொள்ள சுற்றுலா விசாவில் இந்தியா சென்றுள்ளார்.

முகநூல் காதலன் லட்சுமணன் ஆந்திராவின் சித்தூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர். இதேவேளை விக்னேஸ்வரி இலங்கையில் பலாங்கொடை, பத்தனாவத்த, இலுக்கும்புர, ஒபநாயக்கபுர என்ற முகவரியை சேர்ந்தவர்.

இந்த நிலையில் இலங்கைப் பெண் முகநூல் காதலனை தேடி வந்த செய்தி ஆந்திராவில் சமூக ஊடகங்களில் வைரலானதையடுத்து ஒகஸ்ட் 15 ஆம் திகதி விசா காலாவதியாகும் முன் அவர் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் அல்லது நீட்டிப்பு பெற வேண்டும் என்று பொலிஸார் அறிவுறுத்தினர்.

இந்த காதல் ஜோடி திருமணம் செய்து கொள்ள முடிவு செய்த பின்னர் விக்னேஸ்வரி ஜூலை 8 ஆம் திகதி ஆந்திராவுக்கு வந்தார். ஜூலை 20 ஆம் திகதி சித்தூர் மாவட்டம் வி கோட்டாவில் உள்ள சாயிபாபா கோவிலில் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

முகநூல் காதலனை தேடி இந்தியாவுக்கு பறந்து சென்ற இலங்கை தமிழ் யுவதி! அங்கு நடந்தது? | Sri Lankan Tamil Girl India Facebook Boyfriend

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வி கோட்டா மண்டலத்தைச் சேர்ந்த அரிமகுலப்பள்ளியைச் சேர்ந்த மேசன் தொழிலாளியான லட்சுமணன், இலங்கையைச் சேர்ந்த விக்னேஷ்வரியுடன் முகநூலில் 2017 ஆம் ஆண்டில் அறிமுகமானார்.

விக்னேஷ்வரி ஜூலை 8 ஆம் திகதி கொழும்பிலிருந்து சுற்றுலா விசாவில் சென்னை வந்தடைந்தார். அவரை வரவேற்க லட்சுமணன் சென்னை சென்றார்.

பின்னர் காதலியை வீட்டிற்கு அழைத்து வந்தார். லட்சுமணனின் குடும்பத்தினர் சம்மதத்துடன் ஜூலை 20ம் திகதி திருமணம் செய்து கொண்டனர். இருப்பினும், சித்தூர் மாவட்ட பொலிஸார் தம்பதியை தங்கள் முன் ஆஜராகுமாறு உத்தரவிட்டனர்.

முகநூல் காதலனை தேடி இந்தியாவுக்கு பறந்து சென்ற இலங்கை தமிழ் யுவதி! அங்கு நடந்தது? | Sri Lankan Tamil Girl India Facebook Boyfriend

விக்னேஷ்வரியின் விசா ஒகஸ்ட் 15ஆம் திகதியுடன் முடிவடைவதால், சித்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (எஸ்பி) ஒய் ரிஷாந்த் ரெட்டி அவருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அதற்குள் அவர் இலங்கை திரும்ப வேண்டும் என்று பொலிஸார் அறிவுறுத்தினர்.

எனினும் விக்னேஷ்வரி தனது நாட்டிற்குத் திரும்ப மறுத்து அவர் தனது கணவருடன் நிரந்தரமாக தங்குவதற்கு இந்திய அரசாங்கம் ஏற்பாடு செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

விக்னேஷ்வரி இந்தியக் குடியுரிமையைப் பெறத் திட்டமிட்டுள்ளதாகவும் நடைமுறை மற்றும் அளவுகோல்களும் அவருக்கு விளக்கப்பட்டதாகவும் எஸ்பி ஊடகங்களிடம் தெரிவித்தார்.

கடந்த சனிக்கிழமையன்று இந்தியாவில் தங்குவதற்கான விசாவை ஒரு வருடம் நீட்டிக்க விண்ணப்பித்தார்.

“இந்திய குடிமகனை திருமணம் செய்து கொண்டதன் அடிப்படையில் அவருக்கு நீட்டிப்பு கிடைக்க வாய்ப்புள்ளது” என்று எஸ்பி மேலும் கூறினார்.

மேலும் எதிர்காலத்தில் சட்ட சிக்கல்கள் ஏற்படாமல் இருக்க திருமணத்தை பதிவு செய்து கொள்ளுமாறு தம்பதியினருக்கு பொலிஸாரால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.