யாழ்.நல்லூர் கந்தசுவாமி ஆலய பெருந்திருவிழா தொடர்பில் கோரிக்கை..

0
242

வரலாற்று பிரசித்தி பெற்ற யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலய பெருந்திருவிழாவை முன்னிட்டு தினசரிப் புகையிரத சேவையை முன்னெடுக்கவேண்டும் என யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் பிரதிக் குழுக்களின் தவிசாளருமான அங்கஜன் இராமநாதன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பில் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சர் பந்துல குணவர்த்தனவுக்கு அங்கஜன் இராமநாதன் அனுப்பியுள்ள கடிதத்திலேயே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த கடிதத்தில்,

யாழ் நல்லூர் கந்தசுவாமி ஆலய பெருந்திருவிழா தொடர்பில் முன்வைக்கப்பட்ட கோரிக்கை | Kanthaswamy Temple Nallur Jaffna Festival Request

நல்லூர் முருகன் கோவில் என்றும் அழைக்கப்படும் நல்லூர் கந்தசுவாமி கோவில் யாழ்ப்பாண குடாநாட்டில் உள்ள மிகவும் பிரபலமான இந்து கோவில்களில் ஒன்றாகும். நல்லூர் கந்தசுவாமி கோவில் திருவிழா மிக நீண்ட திருவிழாக்களில் ஒன்றாகும்.

சிறப்பு ரயில் சேவைகள் தொடர்பில் கோரிக்கை

இந்த 25 நாட்களிலும் தினமும் காலை மற்றும் மாலை நேரங்களில் நடைபெறும் பூஜை வழிபாடுகளில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொள்வார்கள். வெகுதொலைவில் இருந்து வெளிநாட்டினர் இலங்கைக்கு வந்து தங்கள் பல்வேறு நேர்த்திகளைச் செலுத்தி திருவிழாவில் பங்கேற்கின்றனர்.

2023 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் 16 ஆம் திகதி செப்டம்பர் 16 ஆம் திகதி வரை நடைபெறவுள்ள “வருடாந்த நல்லூர் திருவிழாவில்” இலங்கை புகையிரத திணைக்களத்தால் யாழ்ப்பாணத்திற்கு விசேட ரயில் சேவைகள் வழங்கப்பட வேண்டும் என்பதை உங்கள் கவனத்திற்குக் கொண்டு வர விரும்புகிறேன்.

யாழ் நல்லூர் கந்தசுவாமி ஆலய பெருந்திருவிழா தொடர்பில் முன்வைக்கப்பட்ட கோரிக்கை | Kanthaswamy Temple Nallur Jaffna Festival Request

தற்போதுள்ள அனைத்து ரயிலின் முன்பதிவு செய்யப்பட்ட இருக்கைகளும் இந்த காலகட்டத்தில் ஏற்கனவே முன்பதிவு செய்யப்பட்டுள்ளன என்பதை நான் புரிந்துகொண்டேன்.

எவ்வாறாயினும், இந்த வருடாந்த திருவிழாவில் கலந்து கொள்ள விரும்பும் யாத்திரீகர்களுக்கு கூடுதல் ரயில் சேவைகளை வழங்குவது அவசியம் என்று நான் நம்புகிறேன்.

சிறப்பு ரயில் சேவைகள் செயல்படும் பட்சத்தில், முன்கூட்டியே டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய வாய்ப்பு கிடைக்காத, நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், புலம்பெயர் சமூகங்களைச் சேர்ந்த பெரும்பாலான இந்து பக்தர்களுக்கு வசதியாக இருக்கும். அதே போல் இது அனைத்து வயதினருக்கும் பாதுகாப்பான மற்றும் விலை குறைந்த விருப்பமாக இருக்கும்.

இத்திருவிழாவின் சமய சுற்றுலா ஊக்குவிப்பு மற்றும் யாழ்ப்பாணத்திற்கு அதிகமான பார்வையாளர்களை ஈர்ப்பதற்கு இது ஒரு சிறந்த வழியாகும். கொரோனாவுக்கு பின்னர் இந்த ஆண்டு திருவிழா முன்பை விட பெரிய அளவில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

எனது கோரிக்கையை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பரிசீலித்து, வரவிருக்கும் வருடாந்த நல்லூர் திருவிழாவிற்கு போதுமான எண்ணிக்கையிலான சிறப்பு ரயில் சேவை ஏற்பாடுகளை செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன் என அவர் குறிப்பிட்டுள்ளார் .