நோர்வே வாழ் இலங்கை வைத்தியரின் மனிதாபிமானம்!

0
195

இலங்கையைச் சேர்ந்த நோர்வே நாட்டில் வசித்து வருகின்ற வைத்திய கலாநிதி எட்வெட் எல்மர் நேற்று வியாழக்கிழமை (28) பின் தங்கிய கிராமத்தில் உள்ள இரு பாடசாலை மாணவர்களுக்கு மனிதாபிமான பணியை செய்துள்ளமை பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

நோர்வே நாட்டில் வசித்து வரும் வைத்திய கலாநிதி எட்வெட் எல்மர் மன்னார் மாவட்டம் குஞ்சுக்குளம் பகுதிகளில் உள்ள இரண்டு பாடசாலைகளைச் சேர்ந்த சுமார் 200 மாணவர்களுக்கு போசக்கை மேம்படுத்தும் வகையில் விற்றமீன் மருந்துகளை வழங்கி வைத்துள்ளார்.

வெளிநாட்டுவாழ் இலங்கை மருத்துவரின் மனிதாபிமானம்! | Humanitarianism A Sri Lankan Doctor Living Abroad

மருத்துவரின் சமூகப்பணி

இலங்கையில் இருந்து புலம்பெயர்ந்து சென்று நோர்வே நாட்டில் வசித்து வருகின்ற வைத்திய கலாநிதி எட்வெட் எல்மர் தனது குடும்பத்துடன் இலங்கைக்கு வருகை தந்துள்ளார்.

இந்த நிலையில் குறித்த மனிதாபிமான பணியை முன்னெடுத்துள்ளார். வியாழக்கிழமை (27) குறித்த பின் தங்கிய கிராமத்தில் உள்ள இரு பாடசாலைகளுக்குச் சென்று மாணவர்களுக்கான உடல் பரிசோதனை மேற்கொண்டதோடு அவர்களுக்கு தேவையான விற்றமீன் அடங்கிய மருந்துகள் வழங்கி வைத்துள்ளார்.

வெளிநாட்டுவாழ் இலங்கை மருத்துவரின் மனிதாபிமானம்! | Humanitarianism A Sri Lankan Doctor Living Abroad

இதன்போது, குறித்த வைத்தியரோடு மடு வைத்திய அதிகாரி வைத்தியர் டெனி மற்றும் வைத்திய கலாநிதி ஞா.குணசீலன் ஆகியோரும் சென்றிருந்தனர்.

அதேவேளை இலங்கையில் தற்போது வைத்திய துறையில் பாரிய நெருக்கடி ஏற்பட்டுள்ள நேரத்தில் குறித்த வைத்தியரின் மனிதாபிமான பணிக்கு பலரும் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.