யாழ் வல்வெட்டித்துறையில் அடுத்தடுத்து ஆபத்தான உயிரினம் மீட்பு!

0
189

யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை பகுதியில் நேற்றையதினம் 5 முதலைகள் பிடிக்கப்பட்டு வனஜீவராசிகள் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

முதலைகளின் அச்சுறுத்தல்

தொண்டைமாறு செல்வச்சந்நிதி ஆற்று நீரேரியில் நீண்டகாலமாக முதலைகளின் அச்சுறுத்தல் காணப்படுவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்து வந்தனர்.

இந்த நிலையிலேயே நேற்றைய தினம் குறித்த முதலைகள் பிடிக்கப்பட்டுள்ளன.

அந்தவகையில் ஆற்று நீரேரியில் 4 முதலைகளும் கொம்மந்தறை பகுதியில் உள்ள நீர் சகதியில் ஒரு முதலையும் பிடிக்கப்பட்டு வனஜீவராசிகள் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.