போதகர் ஜெரோமின் வங்கி கணக்குகளில் 12 மில்லியன் பணம்

0
152

பிற மதங்கள் தொடர்பில் சர்ர்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்ட போதகர் ஜெரோம் பெர்னாண்டோவின் 11 வங்கிக் கணக்குகளை ஆராய்ந்ததில் மொத்தம் 12.2 பில்லியன் உள்ளதாக உயர் நீதிமன்றத்தில் இன்று (28) தெரிவிக்கப்பட்டது.

இதனை சட்டமா அதிபர் சஞ்சய் ராஜரத்தினம் சார்பில் ஆஜரான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் பிரியந்த நவான தெரிவித்தார். வண. எல்லே குணவன்ச தேரர் தாக்கல் செய்த மனு மீதான விசாரணை இன்று (28) காலை இடம்பெற்றது.

இதன்போதே, சர்ர்சைக்குரிய போதகர் ஜெரோம் பெர்னாண்டோவின் வங்கிக் கணக்குகளில் உள்ள பணம் தொடர்பில் தெரிவிக்கப்பட்டது.