குழந்தைகளுக்கு கிட்னி பிரச்சினை ஏன் வருகிறது தெரியுமா..

0
256

தற்போது உள்ள சிறுவர்களுக்கு கிட்னி கற்கள் பெரும் பிரச்சினையாக இருந்து வருகின்றது.

இது தவறான உணவுப் பழக்கம், சிறுநீரை அடக்கி வைப்பது, போதிய அளவு தண்ணீர் குடிக்காமல் இருப்பது உள்ளிட்ட காரணங்களினால் ஏற்படுகின்றது.

இவ்வாறு சிறுவயதிலே நோய்கள் வருவதால் குழந்தைகளின் ஆரோக்கியம் பாதிக்கப்படுகின்றது.

அந்த வகையில் கிட்னி பிரச்சினை எவ்வாறு குழந்தைகளுக்கு ஏற்படுகின்றது என்பதனை தொடர்ந்து பார்க்கலாம்.

குழந்தைகளுக்கு எப்படி கிட்னி பிரச்சினை ஏற்படுகின்றது?

பொதுவாக குழந்தைகளின் உணவுகளில் செயற்கை நிறம், சுவையூட்டிகள் மற்றும் அதிக உப்பு, சர்க்கரை ஆகிய பொருட்கள் சேர்ப்பதால் இது போன்ற நோய்கள் ஏற்படுகின்றது என மருத்துவர்கள் கூறுகின்றார்கள்.

அதிலும் சோடியம், சுவையூட்டி ரசாயனம் ஆகிய பொருட்கள் நேரடியாக கிட்னியை பாதிக்கும். இந்த நிலைமையில் தண்ணீர் குடிக்காமல் இருந்தால் இந்த கிட்னி பிரச்சினை ஏற்படுகின்றது.

சிறுநீரகங்களால் நச்சுக்களை வெளியேற்ற முடியாத பொழுது சிறு சிறு கற்களாக மாறுகின்றது இது தான் கிட்னியில் கற்கள் என நாம் கூறுகின்றோம்.

இந்த கற்கள் சிறுநீர் பாதை வழியாக வெளியேற முடியாத அளவிற்கு பெரியதாகும் போது அது நினைத்து கூட பார்க்க முடியாத அளவு வலியை ஏற்படுத்தும்.

இதன் காரணமாக உடல் பருமன் மற்றும் குழந்தை பருவத்திலேயே உயர் ரத்த அழுத்தம் ஆகிய பிரச்சினைகள் ஏற்படும்.