குடும்ப சுமையால் கனவை தொலைத்த இளம் வீராங்கனை

0
400

தடையூன்றி பாய்தல் என்ற போல்வால்ட் (paul vault) போட்டியில் தேசிய சாதனைகளை படைத்த இலங்கையின் தலைசிறந்த தடகள வீராங்கனை ஒருவர் துபாயில் வீட்டுப் பணிப்பெண்ணாக பணிபுரிந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இலங்கையின் நாணய நெருக்கடி காரணமாக உயர்ந்து வரும் மருத்துவ கட்டணங்கள், நீண்ட கால நோய் பராமரிப்பு தேவைப்படும் தனது தாயை கவனிப்பதில் பிரச்சினையை கவனம் செலுத்தவேண்டிய நிலை ஏற்பட்டதால் 24 வயதான சச்சினி பெரேரா தனது தடகள கனவுகளை நிறுத்தி வைத்தார்.

இதனையடுத்து அவர் துபாய்க்கு சென்று பணிப்பெண்ணாக பணியாற்றி வருகிறார்.

குடும்ப சுமையால் கனவை தொலைத்த இளம் வீராங்கனை | Young Player Lost Her Dream Due To Family Burden

எனினும் போட்டிகளில் தங்கம் வெல்லும் கனவை சச்சினி பெரேரா தொடர்ந்தும் கொண்டிருப்பதாகவும் “இதுதான் எனது உலகம் என்று நான் உணர்கிறேன்” எனவும் ஆங்கில நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார்.

பெற்றோரின் மனநிலை

“நீ ஒரு விளையாட்டு வீராங்கனை, வீட்டு வேலைக்காரி அல்ல” என்று தனது பெற்றோர் அடிக்கடி கூறுவார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.

இதன்போது இலங்கையில் தனது பயிற்சியாளரால் அனுப்பப்படும் வாராந்த வலிமை பயிற்சி அட்டவணையை தற்போது பின்பற்றுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

குடும்ப சுமையால் கனவை தொலைத்த இளம் வீராங்கனை | Young Player Lost Her Dream Due To Family Burden

இலங்கையின் ஊடகங்களினால் இந்த தகவல் வெளியானதையடுத்து சச்சினி பெரேராவின் நிலைமை கவனத்தை ஈர்த்துள்ளது.

இந்தநிலையில் சச்சினிக்கு அரபு இராச்சியத்தில் விளையாட்டு தொடர்பான வேலையைத் தேட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக துபாயில் உள்ள இலங்கையின் தூதரக அதிகாரி அலெக்ஸி குணசேகர தெரிவித்துள்ளார்.