திருமண வீட்டில் அழையா விருந்தாளிகளாக வந்த யானைகள்: பைக்கில் தப்பிச் சென்ற மணமக்கள்!

0
169

மேற்கு வங்க மாநில கிராமத்தில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் யானை கூட்டம் புகுந்ததால் மணமக்கள் பைக்கில் தப்பி சென்ற சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள ஜர்காம் பகுதி ஜோவல்பங்கா கிராமத்தைச் சேர்ந்தவர் தன்மோய் சிங்கா. இருவருக்கும் மம்பி சிங்கா என்ற பெண்ணுக்கும் கடந்த சனிக்கிழமை திருமணம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

அழையா விருந்தாளிகளான யானைகளால் களேபரமான திருமண வீடு: பைக்கில் மணமக்கள் தப்பியோட்டம்! | Wedding House Infested By Elephants Bengal

விருந்து நேரத்தில் புகுந்த யானைகள்

சமீபத்தில் நடைபெற்ற பஞ்சாயத்து தேர்தலால் ஒத்திவைக்கப்பட்டிருந்த பல திருமணங்கள் நடத்த கிராமத்தினர் முடிவு செய்திருந்தனர். அதன்படி வெல்டராக இருக்கும் தன்மோய் சிங்கா திருமணம் நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில் திருமணத்திற்கு ஏராளமான உறவினர்கள் அங்கு குவிந்தனர்.

திருமண விருந்தாக ஆட்டுக்கறி, இறால், உருளைக் கிழங்கு, காய்கறி சூப் உட்பட பல்வேறு உணவு வகைகள் சமைக்கப்பட்டிருந்தன. திருமணத்துக்கு வந்திருந்தவர்கள் விருந்துண்ண அமர்ந்த போது திடீரென யானைகள் கூட்டமாக கொட்டகைக்குள் புகுந்தன.

அவற்றைப் பார்த்ததும் உறவினர்கள் கூச்சலிட்டு ஓடிய நிலையில் மணமக்களும் பைக்கில் தப்பிச்சென்றனர். இதையடுத்து அடுத்தடுத்து நடைபெற இருந்த திருமணங்களும் ஒத்திவைக்கப்பட்டன.

அழையா விருந்தாளிகளான யானைகளால் களேபரமான திருமண வீடு: பைக்கில் மணமக்கள் தப்பியோட்டம்! | Wedding House Infested By Elephants Bengal

கிராமத்தவர்கள் அச்சம்

அங்கு யானைகள் கூட்டம் கூட்டமாக திரிவதால், உணவு வாசனைக்கு திருமண நிகழ்ச்சிகளுக்குள் புகுந்து விடுகின்றன.

ஜர்காம் பகுதியை ஒட்டியுள்ள வனப்பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட யானைகள் உள்ள நிலையில் அவை தனித்தனிக் குழுவாக பிரிந்து கிராமங்களுக்குள் புகுந்துள்ளன.

அதோடு யானைகள் கும்பல் கும்பலமாக அடிக்கடி வந்து நாசம் செய்து விட்டு செல்கின்ற நிலையில் திருமண வீட்டில் யானைகள் புகுந்ததால் பரப்ரப்பு ஏற்பட்ட அதேவேளை இதனால் கிராம மக்கள் அச்சத்தில் உள்ளதாகவும் கூறப்படுகின்றது.   

அழையா விருந்தாளிகளான யானைகளால் களேபரமான திருமண வீடு: பைக்கில் மணமக்கள் தப்பியோட்டம்! | Wedding House Infested By Elephants Bengal