கோட்டாபயவிடம் பதிவு செய்யப்படவுள்ள வாக்குமூலம்…!

0
188

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவிடம் லஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு ஆணைக்குழு விசாரணை நடத்த உள்ளதாக தெரியவருகிறது. 

அதன்படி எதிர்வரும் 27ஆம் திகதி கோட்டாபயவிடம் வாக்கு மூலமொன்று பதிவு செய்து கொள்ளப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

போராட்டக்காரர்களால் மீட்கப்பட்ட பணம்

கடந்த 2022ஆம் ஆண்டு ஜுலை மாதம் 9ஆம் திகதி 17.85 மில்லியன் ரூபா பணம் ஜனாதிபதி மாளிகையிலிருந்து போராட்டக்காரர்களினால் மீட்கப்பட்டது.

கோட்டாபயவிடம் பதிவு செய்யப்படவுள்ள வாக்குமூலம்..! | Bribery Commission To Record Statement From Gr

இந்த சம்பவம் தொடர்பில் புரவெசி பலய என்ற அமைப்பு லஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு பிரிவில் முறைப்பாடு செய்திருந்தது.

இதேவேளை, ஜனாதிபதி மாளிகையில் மீட்கப்பட்ட பணம் ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணி கட்சியைச் சேர்ந்த வர்த்தகர்களினால் வழங்கப்பட்டது என முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நீதிமன்றில் தெரிவித்துள்ளார்.

தொலைந்து போன விபரங்கள்

போராட்டம் இடம்பெற்ற காலத்தில் சேதமாக்கப்பட்ட மொட்டு கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் வீடுகளை புனரமைப்பதற்கு இந்த நிதி பயன்படுத்தப்படவிருந்தது என குறிப்பிட்டுள்ளார்.

எனினும், ஜனாதிபதி மாளிகை முற்றுகையிடப்பட்ட காரணத்தினால் யார் எவ்வளவு தொகை பங்களிப்பு செய்தனர் என்பது பற்றிய விபரங்கள் தொலைந்து விட்டதாகவும் கூறியுள்ளார். 

கோட்டாபயவிடம் பதிவு செய்யப்படவுள்ள வாக்குமூலம்..! | Bribery Commission To Record Statement From Gr