உச்சிமாநாட்டில் புடினுக்கு இடமில்லை!

0
241

எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் தென்னாப்பிரிக்காவில் நடைபெறவுள்ள பிரிக்ஸ் நாடுகளின் உச்சிமாநாட்டில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் கலந்து கொள்ள மாட்டார் என தென்னாப்பிரிக்க ஜனாதிபதி அலுவலகம் இன்று அறிவித்துள்ளது.

அதற்கு பதிலாக ரஷ்யாவின் வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் பிரதிநிதித்துவப்படுத்துவார் என்றும் ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது.

புடினுக்கு பிடியாணை

புடினுக்கு சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்துள்ளது.

உச்சிமாநாட்டில் புடினுக்கு இடமில்லை! | Putin Has No Place At The Summit

இந்நிலையில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் (ICC) உறுப்பினராக, புடின் இந்த மாநாட்டில் கலந்து கொண்டால், போர்க் குற்றங்களுக்காக அவரைக் கைது செய்ய வேண்டும் என்பதால் தென்னாபிரிக்கா ஒரு இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

அதேசமயம் பிரேசில், இந்தியா, சீனா மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளின் தலைவர்கள் உச்சி மாநாட்டில் கலந்து கொள்வார்கள் என்றும் தென்னாபிரிக்க ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளது.