ஒரே தட்டில் சிங்கத்துடன் ஜாலியாக சாப்பிடும் யுவதி: வைரலாகும் வீடியோ

0
255

யுவதியொருவர் சிங்கத்துடன் ஒரே தட்டில் உணவருந்துவது போன்ற காணொளியொன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது.

இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்ட குறித்த காணொளியில் சிங்கத்தின் அருகில் யுவதியொருவர் அமர்ந்து இருந்து உணவருந்துகின்றார். அங்கு ஒரு தட்டில் அசைவ உணவு வைக்கப்படுவதையும்,  உணவை சிங்கமும், யுவதியும் ருசி பார்ப்பதையும் காணமுடிகின்றது.

ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள் ராஸ் அல் கைமாவில் உள்ள வனவிலங்கு பூங்காவில் இக்காணொளி படமாக்கப்பட்டுள்ளது. இக் காணொளியானது 30.7 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.