நெதர்லாந்து அழகி பட்டத்தை வென்ற முதல் திருநங்கை!

0
187

இந்த ஆண்டு நெதர்லாந்து அழகி பட்டத்தை திருநங்கை மாடல் அழகி வென்றுள்ளார். 22 வயதான டச்சு மாடல் ரிக்கி வலேரி கோல் இந்த ஆண்டு மிஸ் நெதர்லாந்து கிரீடத்தை வென்றது முழு உலகத்தின் கவனத்தை ஈர்த்தது. ஏனெனில் அவர் ஒரு திருநங்கை ஆவார்.

 அழகி பட்டத்தை வென்ற முதல் திருநங்கை

அத்துடன் நெதர்லாந்து அழகி பட்டத்தை வென்ற நாட்டின் முதல் திருநங்கை என்ற பெருமையை ரிக்கி பெற்றுள்ளார். ரிக்கி வலேரியின் இந்த வெற்றியின் மூலம் இந்த ஆண்டுக்கான உலக அழகி போட்டிக்கு அவர் தகுதி பெற்றுள்ளார்.

நெதர்லாந்து அழகி பட்டத்தை வென்ற முதல் திருநங்கை! | The First Transgender To Win Miss Netherlands

அவர் உலக அழகி பட்டத்தை வென்றால் பட்டத்தை கைப்பற்றும் முதல் திருநங்கை என்ற பெருமையைப்யும் அவர் பெறுவார். இந்நிலையில் மிஸ் நெதர்லாந்து ஆன பிறகு பேசிய ரிக்கி,

மிஸ் வேர்ல்ட் போட்டியில் சேர ஆவலுடன் இருப்பதாக கூறிய அவர் வெற்றிக்குப் பிறகு, தனக்கு நல்ல மற்றும் கெட்ட பதில்கள் கிடைத்ததாகவும் அவர் கூறினார். அதேவேளை திருநங்கை என்ற முறையில் பல சவால்களை சந்திக்க வேண்டியிருந்ததாகவும் தெரிவித்திருந்தார்.