சாணக்கியனை தாக்க முயன்றதால் மட்டக்களப்பில் பரபரப்பு!

0
206

மட்டக்களப்பில் அனுமதி பத்திரமின்றி சேவையில் ஈடுபடும் தனியார் போக்குவரத்து பஸ்வண்டிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று திங்கட்கிழமை (17) இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் கலந்து கொண்டார்.

சட்டவிரோத அனுமதிபத்திரம் வழங்கல், ஊழலில் ஓர் அரசியல் கட்சியைச் சேர்ந்த தனியார் போக்குவரத்து பொறுப்பதிகாரி தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தபோது அவரை தாக்க முற்பட்ட இருவரை ஆர்ப்பாட்காரர்கள் துரத்தி துரரத்தி அடித்து வெளியேற்றியதையடுத்து அங்கு பெரும் பதற்ற நிலை தோன்றியுள்ளதாக  தகவல்கள் தெரிவிக்கின்றன.

அனுமதிப்பதிரம் இன்றி சேவையில் ஈடுபடும் பஸ் வண்டிகள்

மட்டக்களப்பில் பதற்ற நிலை; சாணக்கியனை தாக்க முயன்றதால் பரபரப்பு!(Photos) | Tension In Batticaloa Tried To Attack Chanakyan

மட்டக்களப்பு தனியார் பஸ்வண்டி உரிமையாளர்கள் சங்கம் போக்குவரத்து அனுமதிப்பதிரம் இன்றி சேவையில் ஈடுபடும் பஸ் வண்டிகளை தடை செய்ய கோரி மட்டு தனியார் பஸ் வண்டி நிலையத்தில் அனைத்து பஸ்களையும் நிறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியனுக்கு தனியார் பஸ் வண்டி உரிமையாளர்கள் சங்கம் அழைப்பு விடுத்ததையடுத்து அவர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு, “பொலன்னறுவையில் உள்ள தனியார் பஸ் வண்டி உரிமையாளர் ஒருவரின் இரு பஸ்வண்டிகளுக்கு ஒரு போக்குவரத்து அனுமதி பத்திரத்திரம் வழங்கப்பட்டுள்ளது” என்றார்.

மட்டக்களப்பில் பதற்ற நிலை; சாணக்கியனை தாக்க முயன்றதால் பரபரப்பு!(Photos) | Tension In Batticaloa Tried To Attack Chanakyan

இதில் கிழக்கு மாகாண தனியார் போக்குவரத்து சபையில் மட்டக்களப்பில் பொறுப்பாளரராக கடமையற்றி வந்த அரசியல் கட்சி ஒன்றின் உறுப்பினர் கடந்த 8 வருடங்களாக குறித்த பஸ் வண்டி சேவையில் ஈடுபட அனுமதி வழங்கி ஊழலில் புரிந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

அந்த பஸ் வண்டியின் உரிமையாளரின் பஸ் வண்டியே மட்டக்களப்பு வாழைச்சேனை வரையிலான அனுமதி பத்திரத்துடன் பொலன்னறுவை கதுறுவெலவில் இருந்து காத்தான்குடி வரையில் சட்டவிரோதமாக சேவையில் ஈடுபட்டுள்ள போது மன்னம்பிட்டி விபத்தில் 11 பேர் உயிரிந்துள்ளதாகவும் சணக்கியன் கூறினார்.

மட்டக்களப்பில் பதற்ற நிலை; சாணக்கியனை தாக்க முயன்றதால் பரபரப்பு!(Photos) | Tension In Batticaloa Tried To Attack Chanakyan

இவ்வாறு சட்டவிரோதமாக அனுமதிபத்திரமின்றி போக்குவரத்து சேவையில் ஈடுபட அனமதி வளதாகவும் அவர் குறிப்பிட்டார். இந்த நிலையில் அங்கு இருந்த இருவர் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் நோக்கி, உண்மைக்கு புறம்பாக பேசவேண்டாம் என பேசியவாறு தாக்க முற்பட்டனர்.

சாணக்கியனை எச்சரித்த இருவர்

எனினும், அங்கிருந்த பஸ் வண்டி உரிமையாளர்கள் மற்றும் ஆர்ப்பாட்டகாரர்கள் ஒன்றிணைந்து அந்த இருவரையும் அங்கிருந்து துரத்தி துரத்தி அவர்கள் மீது தாக்குதல் நடாத்தினர். இதனையடுத்து அந்த பகுதியில் பெரும் பதற்றம் நிலவியதையடுத்து பொலிஸார்  குழப்ப நிலையை கட்டுப்பாட்டுக்கு கொண்டு வந்தனர். அதனையடுத்து ஆர்ப்பாட்டகாரார்கள் அங்கிருந்து விலகி சென்றனர்.

மட்டக்களப்பில் பதற்ற நிலை; சாணக்கியனை தாக்க முயன்றதால் பரபரப்பு!(Photos) | Tension In Batticaloa Tried To Attack Chanakyan

இதேவேளை மட்டக்களப்பு மாவட்டத்தில் இவ்வாறான அராஜகங்களுக்கு நாங்கள் இடமளிக்க கூடாது என்றும் தனிநபர்களுக்காக வக்காளத்து வாங்கி இந்த குழப்பத்தை ஏற்படுத்தியதை வன்மையாக கண்டிக்கின்றோம் எனவும் சாணக்கியன் எம்.பி கூறினார்.

அத்துடன்  கொல்லப்பட்ட 11 பேரின் நீதி கிடைக்க வேண்டும் இந்த சட்டவிரோத அனுமதி பத்திரம் வழங்கியமை தொடர்பாக பாராளுமன்றத்தில் பேசுவதுடன் நாளை ஜனாதிபதியுடனான சந்திப்பின் போது இந்த விடயத்தை விசேடமாக பேசவுள்ளதாகவும்  சாணக்கியன் தெரிவித்தார்.