கண் பார்வையை பாதுகாக்க இலகுவான வழிகள் அறிவோம்..

0
300

கண் பார்வை என்பது அனைவருக்கும் ஆரோக்கியமான ஒரு விடயமாகும்.பார்வை பறிபோனால் வாழ்க்கையே இருள்மயமாகிவிடும்.

இவ்வாறான இந்த கண்பார்வையை ஆரோக்கியமாக வைக்க சில எளிய வழிகளை காணலாம்.

எளிய வழிகள்

*நல்ல கண் பார்வை பெற தினசரி 7 – 8 மணி நேரம் நன்றாக தூங்குவது அவசியம். இதனால் கண்கள் நல்ல ஓய்வை பெறுவது ஆரோக்கியமாக இருக்கும்.

*மொபைல், கணனி உள்ளிட்ட டிஜிட்டல் திரைகளை நீண்ட நேரம் பார்ப்பதை தவிர்க்க வேண்டும். நீண்ட நேரம் டிஜிட்டல் திரை வெளிச்சத்தை பார்ப்பது கண் விழித்திரைகளில் பாதிப்பை ஏற்படுத்தும்.

*தினமும் இருவேளை உள்ளங்கைகளால் கண்களை மூடிக் கொண்டு சில நிமிடங்கள் பயிற்சி செய்ய வேண்டும்.

*கண் பார்வையை மேம்படுத்தும் மீன், கரட், பப்பாளி போன்ற உணவுகளை அவ்வபோது எடுத்துக் கொள்ள வேண்டும்.

*கண்ணை கூசும் வெயில் வெளியே சென்றால் கூலிங் க்ளாஸ் போன்றவற்றை அணிந்து கொள்ள வேண்டும்.

*இரவு நேரங்களில் முக்கியமாக நள்ளிரவு நேரங்களில் விழித்திருப்பதை தவிர்க்க வேண்டும்.

*தினசரி இரண்டு முதல் இரண்டரை லிட்டர் தண்ணீர் அருந்த வேண்டும். இது உடல் சூட்டை குறைப்பதுடன், கண் நரம்புகள் சிறப்பாக செயல்பட உதவும்.