சேவலை சிறையில் அடைத்த போலீசார்! காரணம் என்ன தெரியுமா?

0
320

இந்தியாவில் தெலுங்கானாவில் சேவல் ஒன்றை பொலிசார் சிறையில் அடைத்துள்ள சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

தெலுங்கானா மாநிலம் மகபூபநகர் மாவட்டத்தில் பூரெட்டிப்பள்ளி என்ற கிராமத்தில் சிறுவன் ஒருவன் கையில் சேவல் ஒன்றை பிடித்துக் கொண்டு வீதியில் நடந்து சென்றுள்ளான்.

இதை கண்ட அப்பகுதி கிராம மக்கள் சிறுவன் சேவலை திருடிக் கொண்டு செல்வதாக நினைத்து பொலிசில் புகார் அளித்துள்ளனர்.

சேவலை சிறையில் அடைத்த பொலிஸார்! காரணம் என்ன தெரியுமா? | Police Jailed The Rooster India

சிறையில் உள்ள சேவலை காண மக்கள் ஆர்வம்

இதனையடுத்து பொலிஸார் சிறுவன் அவன் கையில் வைத்திருந்த சேவலையும் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

சிறுவன் 18 வயது நிரம்பாததால் அவனது பெற்றோரை வரவழைத்த பொலிஸார் சிறுவனை அவர்களிடம் ஒப்படைத்துள்ளனர்.

சேவலை சிறையில் அடைத்த பொலிஸார்! காரணம் என்ன தெரியுமா? | Police Jailed The Rooster India

அதே சமயம் சேவலை காணவில்லை என்று யாரும் புகார் அளிக்காததால் பொலிஸார் சேவலை சிறையில் அடைத்து உணவு வழங்கி வருகின்றனர்.

இந்நிலையில் சேவல் சிறையில் அடைக்கப்பட்ட செய்தியறிந்த மக்கள் காவல் நிலையம் சென்று சிறையில் இருக்கும் சேவலை ஆர்வமுடன் பார்த்து வருகின்றனராம்.