முதல் தடவையாக இந்தியாவிற்கு விஜயம் செய்யவுள்ள ஜனாதிபதி ரணில்..

0
232

இந்திய வெளிவிவகார செயலாளர் வினய் மோகன் குவத்ரா அடுத்த வாரம் இலங்கை வரவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஜூலை 20ஆம் திகதி இடம்பெறவுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் புதுடில்லி விஜயத்திற்கான ஏற்பாடுகளை மேற்கொள்வதற்காக வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  

முதல் தடவையாக இந்தியா விஜயம்

ஜனாதிபதி விக்ரமசிங்க கடந்த வருடம் பதவியேற்ற பின்னர் முதல் தடவையாக இந்தியாவிற்கு விஜயம் செய்யவுள்ளார்.

கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர, வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி, அமைச்சர் ஜீவன் தொ ண்டமான் மற்றும் ஜனாதிபதியின் பணிப்பாளர் பிரதானி சாகல ரத்நாயக்க ஆகியோர் இந்த விஜயத்தில் பங்கேற்கவுள்ளனர்.

இந்த விஜயத்தின் போது இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் ஜனாதிபதி இருதரப்பு பேச்சுக்களை நடத்தவுள்ளார்.