லங்கா பிரீமியர் லீக்கில் கால்பதிக்கும் இரண்டு யாழ்ப்பாண வீரர்கள்!

0
396

இலங்கையில் நடைபெறப்போகும் லங்கா பிரீமியர் லீக் LPL தொடரில் யாழ்ப்பாண மத்திய கல்லூரியை சேர்ந்த இரண்டு வீரர்கள் யாழ்.கிங்ஸ் அணிக்காக மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

விஜயகாந்த் வியாஸ்காந்த் மற்றும் விதுசன் ஆகிய இருவரே இவ்வாறு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

லங்கா பிரீமியர் லீக்கில் கால்பதிக்கும் இரண்டு யாழ்ப்பாண வீரர்கள்! | Two Jaffna Players Play The Lanka Premier League

இவர்களில் விஜயகாந்த் வியாஸ்காந்த் தனது 18 வயதில் இலங்கை தேசிய அணிக்காக விளையாடியதோடு கடந்த மூன்று ஆண்டுகளாக லங்கா பிரீமியர் லீக் தொடரில் தொடர்ந்து விளையாடுபவர் ஆவார்.

மேலும், விதுசன் என்பவர் கொழும்பின் பிரபலமான Moors Club அணிக்காக கடந்த காலங்களில் விளையாடியது மட்டுமன்றி குறித்த அணிக்காக இந்த வருடம் மிகக் கூடுதலான விக்கட்டுக்களை வீழ்த்தி சிறந்த பந்து வீச்சாளருக்கான விருதை பெற்றவர்.

லங்கா பிரீமியர் லீக்கில் கால்பதிக்கும் இரண்டு யாழ்ப்பாண வீரர்கள்! | Two Jaffna Players Play The Lanka Premier League

இவர்களின் இந்த திறமையானது தங்களது கல்லூரிக்கு மட்டும் அன்றி எல்லா தமிழ் மக்களுக்கும் பெருமையை சேர்த்துள்ளதாக சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.