நயினை அம்பாள் ஆலயத்தில் வலம் வந்து வியக்க வைத்த பாம்புகள்; மெய்சிலிர்த்த பக்தர்கள்! (Photos)

0
256

வரலாற்று பிரசித்தி பெற்ற யாழ்ப்பாணம் நயினாதீவு நாகபூஷணி அம்மன் வீதியில் இன்று நாகங்கள் வலம் வந்து காட்சி கொடுத்த சம்பவம் நயினை அம்பாள் பக்தர்களை மெய்சிலிர்க்க வைத்துள்ளது.

நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலய நாளை மறுதினம் 19.06.2023 கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது. இந்த நிலையில் இன்று ஆலய வீதியில் மூன்று நாகங்கள் வலம் வந்து படம் எடுத்து காட்சி கொடுத்துச் சென்றது.

நாகவடிவில்  காட்சி கொடுத்த அம்பாள்

இந்நிலையில் ஆலய திருவிழா ஆரம்பமாகவுள்ள நிலையில் அம்மனை நாடிவந்த நாகங்கள் பக்தர்களுக்கு காட்சி அளித்து சென்றுள்ளமை அன்னையின் அருளை எடுத்தியம்பி நிற்கின்றது.

யாழ் நயினை அம்பாள் ஆலயத்தில் வியக்க வைத்த பாம்புகள்; மெய்சிலிர்த்த பக்தர்கள்! (Photos) | Snakes That Amazed Jaffa Nainathivu Ambal Temple

அதேவேளை நயினாதீவு ஸ்ரீ நாகபூசணி அம்மன் ஆலயத்துக்கு வருடா வருடம் மகோற்சவத்திற்கு முன்னர் அம்பாள் நாகவடிவில் காட்சி கொடுப்பார் என்பதும் காலங்காலமாக இடம்பெறுவது வழமை என நயினை அம்மன் பக்தர்கள் கூறுகின்றனர்.

வரலாறு கூறும் மகாவம்சம் 

அதேவேளை இலங்கையின் வரலாறு கூறும் மகாவம்சம் என்னும் நூலில் நயினாதீவு பற்றிய பல குறிப்புகள் உள்ளன.

புத்தர் வாழ்ந்த காலத்தில் இலங்கையில் ஆட்சிபுரிந்த இரண்டு நாக அரசர்களுக்கிடையில் ஒரு மணியாசனத்தின் உரிமை தொடர்பாக ஏற்பட்ட பிணக்கைத் தீர்த்து வைப்பதற்காக அவர் நாகதீபத்துக்கு வந்ததாக மகாவம்சம் கூறுகிறது. 

யாழ் நயினை அம்பாள் ஆலயத்தில் வியக்க வைத்த பாம்புகள்; மெய்சிலிர்த்த பக்தர்கள்! (Photos) | Snakes That Amazed Jaffa Nainathivu Ambal Temple

  இதே பிணக்கு/யுத்தம் ‘மணிபல்லவத்தில்’ இடம்பெற்றது என்று ‘மணிமேகலை’க் காப்பியம் கூறுகின்றது. நயினாதீவுக்கு முற்காலத்தே பல பெயர்கள் வழங்கப்பட்டனவென்று வரலாறுகள் கூறுகின்றன.

யாழ் நயினை அம்பாள் ஆலயத்தில் வியக்க வைத்த பாம்புகள்; மெய்சிலிர்த்த பக்தர்கள்! (Photos) | Snakes That Amazed Jaffa Nainathivu Ambal Temple

அதன்படி இத்தலத்திற்கு நாகதிவயின, நாகதீவு அல்லது நாகத்தீவு, நயினார்தீவு, நாகநயினார்தீவு, மணிநாகதீவு, மணிபல்லவத் தீவு, மணித்தீவு, பிராமணத்தீவு, ஹார்லெம் (Haorlem), சம்புத்தீவு, நரித்தீவு, நாகேஸ்வரம், நாகேச்சரம் முதலிய பல பெயர்கள் உள்ளன.