பூ போன்ற இட்லிக்கு வெங்கடேஷ் பட் சொல்லும் ரகசியம்..

0
197

பெரும்பாலானவர்களின் காலை உணவில் முக்கிய இடம்பிடிப்பது இட்லி, சுடச்சுட சாம்பார், காரமான சட்னியுடன் வடை இட்லி என ஒரு புடிபுடி பிடிக்காதவர்கள் குறைவு தான்.

6 மாத குழந்தை முதல் 60 வயது பாட்டி வரை எளிதில் செரிமானம் ஆகக்கூடிய உணவும் இட்லியே.

இந்த பதிவில் மிக எளிதாக பூ போன்ற இட்லி செய்வது எப்படி என பார்க்கலாம்.   

தேவையான பொருட்கள்

இட்லி ரவா- 2 கப்
உளுந்து- 1 கப்
உப்பு- தேவையான அளவு

பூ போன்ற இட்லி செய்யணுமா?

செய்முறை

இட்லி மிக மிருதுவாக இருப்பதற்கு தரமான உளுந்து மிக அவசியம், உளுந்தை நாம் எப்படி அரைக்கிறோம் என்பதை பொறுத்தே இட்லியின் மிருதுத்தன்மை முடிவாகும்.

முன்பெல்லாம் இட்லி அரிசியை நன்றாக கழுவி சுத்தம் செய்து விட்டு இரண்டு மணிநேரத்துக்கு ஊறவைத்து விடுவார்கள், தண்ணீரை முழுவதுமாக வடித்து விட்டு வெள்ளை துணியில் காயவைத்து விடுவார்கள்.

மறுநாள் காலை அதை அரைத்து இட்லி ரவா தயாரித்து விடுவார்கள், ஆனால் இப்போதே இட்லி ரவா தனியாக கடைகளில் கிடைக்கிறது.

அதை பயன்படுத்திக் கொள்ளலாம், உளுந்தை நன்றாக சுத்தம் செய்துவிட்டு இரண்டு மணிநேரம் ஊறவைக்கவும்.

பூ போன்ற இட்லி செய்யணுமா?

ஊறவைத்த உளுந்து பக்குவமாக சுமார் 20 முதல் 20 நிமிடங்களுக்கு ஒவ்வொரு 5 நிமிடத்திற்கு ஒருமுறை தண்ணீர் தெளித்து தெளித்து ஆட்டவும்.

உளுந்து நன்றாக பொங்கிவர வேண்டும், இந்த நேரத்தில் இட்லி ரவாவை சுத்தம் செய்யும் போதே ஊறிவிடும், அதை அப்படியே விட்டு விடவும்.

ரவா ஊறி பக்குவத்திற்கு வந்துவிடும், உளுந்தை ஆட்டி முடித்ததும் ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொள்ளவும்.

பூ போன்ற இட்லி செய்யணுமா?

இதனுடன் தேவையான அளவு உப்பு, இட்லி ரவா சேர்த்து நன்றாக கலக்கிவிடும், எவ்வளவு தூரம் இரண்டும் ஒன்றாக சேர கலக்குகிறோமோ அவ்வளவு இட்லி மிருதுவாக வரும்.

கைகளின் சூட்டிலேயே இட்லி மாவு புளிக்கத் தொடங்கும், சுமார் 6 முதல் 8 மணிநேரம் கழித்து இட்லி ஊற்றி எடுத்தால் பூ போன்ற பஞ்சு இட்லி தயார்!!!