இலங்கையில் அறிமுகமாகும் புதிய போக்குவரத்து திட்டம்

0
278

பொதுப் பயணிகள் போக்குவரத்தில் ஒரு புதிய திருப்புமுனையை இலங்கையின் வாகன இறக்குமதி நிறுவனமான டேவிட் பீரிஸ் மோட்டார் கம்பனி (பிரைவேட்) லிமிடெட் அறிமுகம் செய்துள்ளது.

இலங்கையில் முதன் முறையாக பொதுப் போக்குவரத்திற்கான மாதிரி மின்சார முச்சக்கர வண்டி டெக்ஸி (tuk-tuk – taxi) சேவையான E-drive சேவையை குறித்த நிறுவனம் நேற்று(16.06.2023) அறிமுகப்படுத்தியுள்ளது.

மேலும் சேவைக்கான ஆரம்ப கட்டணமாக 65ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளதோடு அதற்கேற்றால் போல் ஒவொரு கிலோ மீட்டருக்கும் கட்டண உயர்வு அதிகரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்விடயம் தொடர்பில் டேவிட் பீரிஸ் மோட்டார் கம்பனி (பிரைவேட்) லிமிடெட் நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ஜயந்த ரத்நாயக்க கருத்து தெரிவிக்கையில்,

இலங்கையில் அறிமுகமாகும் புதிய போக்குவரத்து திட்டம் | First Electric Taxi Service E Drive Sri Lanka

மின்சார முச்சக்கர வண்டிகள்

டேவிட் பீரிஸ் மோட்டார் கம்பனி நிறுவனத்தினுடைய ஒரு மாதிரி திட்டமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள E-drive சேவையானது, பொதுமக்களுக்கு மலிவான போக்குவரத்து வழியை வழங்குவதோடு , பயணிகளுக்கு பாதுகாப்பையும் சிறந்த அனுபவத்தையும் வழங்கவுள்ளது.

இந்த முன்னோடித் திட்டத்தின் கீழ், எரிபொருளில் இயங்கும் 20 பஜாஜ் முச்சக்கர வண்டிகள் மின்சாரமாக முச்சக்கர வண்டிகளாக மாற்றப்பட்டுள்ளன.

இந்த முச்சக்கர வண்டிகள் ஆரம்பத்தில் கொழும்பு மற்றும் அதன் அருகில் உள்ள புறநகர் பகுதிகளில் இயங்கவுள்ளன.

மேலும், திங்கள் முதல் சனிக்கிழமை வரை காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை இதன் சேவை மக்களுக்கு வழங்கப்படும்.

இலங்கையில் அறிமுகமாகும் புதிய போக்குவரத்து திட்டம் | First Electric Taxi Service E Drive Sri Lanka

E-Drive டெக்ஸி சேவை

E-drive முச்சக்கர வண்டிகள் வெள்ளை மற்றும் பச்சை நிறத்தில் இருப்பதால் அவற்றை எளிதில் அடையாளம் காண முடியும்.

E-drive முச்சக்கர வண்டி சேவைகளை YOGO டெக்ஸி தொலைபேசி செயலி மூலமாகவும், பிரத்யேக தொலைபேசி இலக்கமான 077 7 606077 என்ற இலக்கம் மூலமாகவும் முன்பதிவு செய்து கொள்ளலாம்.

நாட்டில் நல்ல ஒழுக்கமான, தொழில்முறை டெக்ஸி ஓட்டுனர்களை உருவாக்கும் நோக்கத்துடன், E-Drive டெக்ஸி சேவையின் ஓட்டுநர்கள் இந்த வாகனத்தை எப்படி ஓட்டுவது என்பது மட்டுமல்லாமல், சாலை விதிகள் மற்றும் சாலை நெறிமுறைகள் பற்றிய புத்தாக்கப் பயிற்சியையும் பெற்றுள்ளனர்.

மேலும், அனைத்து வாகனங்களும் நிறுவனத்தால் கண்காணிக்கப்படுவதோடு சாரதிகள் விபரங்கள் வாடிக்கையாளரின் தேவைக்காக வாகனத்தில் காட்டப்பட்டிருக்கும்.” என தெரிவித்துள்ளார்.

சூழல் நேயமான, மலிவான போக்குவரத்து

மேலும் இது தொடர்பில் கருத்து தெரிவித்த ஜயந்த ரத்நாயக்க, எங்கள் மாற்றப்பட்ட பஜாஜ் முச்சக்கர வண்டிகளை பதிவு செய்வதற்கான அனுமதியைப் பெற்ற முதல் நிறுவனம் என்பதில் நாங்கள் பெருமையடைகிறோம்.

இந்தப் சூழல் நேயமான, மலிவான போக்குவரத்தைப் பயன்படுத்துவதற்கு பொதுமக்களை அனுமதிப்பதற்காக இந்த தளத்தைப் பயன்படுத்துவதோடு மட்டுமல்லாமல், முச்சக்கர வண்டி சேவைகளுக்கு புதிய தரங்களை அமைக்கும் என நாங்கள் நம்புகிறோம்.

இலங்கையில் உள்ள பஜாஜ் வாகனங்களின் நிபுணர்கள் என்ற வகையில், நிறுவனத்தினால் செய்யப்படும் இந்த சேவைக்கு நம்பிக்கையுடனான உத்தரவாதத்தை எங்களால் அளிக்க முடியும்.

இவ்வாறான செயற்பாடுகளினால் மட்டுமே வாகனத்தில் பயணிக்கும் பயணிகளுக்கு பாதுகாப்பையும் வசதியையும் உறுதிப்படுத்த முடியும்,” என வலியுறுத்தியுள்ளார்.

Gallery
Gallery
Gallery
Gallery