கடவுச்சீட்டுக்கான இணையவழி விண்ணப்பங்கள்; இன்று முதல் ஆரம்பம்

0
147

நாடளாவிய ரீதியில் 51 பிராந்திய செயலாளர்களை பயன்படுத்தி கடவுச்சீட்டுக்கான இணையவழி விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் பணி இன்று முதல் ஆரம்பமாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இணையவழி கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிக்கும் முறை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் ஹோமாகம பிரதேச செயலகத்தில் நேற்று ஆரம்பித்து வைக்கப்பட்டதாக பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் அரசாங்க சேவைகளை டிஜிட்டல் மயமாக்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் முயற்சியின் ஒரு பகுதியாகவே இணையவழி கடவுச்சீட்டு விண்ணப்ப முறைமை நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

கடவுச்சீட்டுக்கான இணையவழி விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் பணி இன்று முதல் ஆரம்பம் | Acceptance E Applications Passports Begins Today

புதிய செயல்முறையானது கடவுச்சீட்டு விண்ணப்ப செயல்முறையை சீர்செய்வதையும் கூரியர் சேவை மூலம் விண்ணப்பதாரர்களின் வீடுகளுக்கு மூன்று நாட்களுக்குள் பாஸ்போர்ட்டுகள் வழங்கப்படுவதை உறுதி செய்வதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

www.immigration.gov.lk என்ற இணையதளத்திற்குச் சென்று ‘கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிக்கவும்’ விருப்பத்தைத் தேர்ந்தெடுத்து, வழங்கப்பட்ட தகவலைச் சரிபார்ப்பதன் மூலம் தனிநபர்கள் தங்கள் வீட்டிலிருந்து கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பதாரர்கள் கொழும்புக்கு செல்லாமல் சொந்த ஊரிலேயே கடவுச்சீட்டை பெற்றுக்கொள்ளும் வசதியை குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் அறிமுகப்படுத்தியுள்ளது.

திணைக்களம் அதன் அலுவலகங்களுக்கு அனுப்பப்படும் விண்ணப்பங்களை தொடர்ந்து ஏற்றுக்கொள்வதுடன் இணையவழி விண்ணப்பதாரர்கள் 51 பிரதேச செயலகங்களில் உள்ள மக்கள் பதிவு திணைக்களத்தின் உப அலுவலகங்களில் கைரேகை அடையாளங்களை சமர்ப்பிக்க முடியும்.