மாதவிடாய் வலியை இல்லாமலாக்கும் கை மருந்து!

0
210

பொதுவாக பெண்களுக்கு மாதவிடாய் 3 முதல் 5 நாட்களுக்கு இருக்கும். முதல் நாள் துவக்கம் இரண்டு நாட்களுக்கு அதிகமான உதிர போக்கும் இருக்கும்.

இது போன்ற நாட்களில் அநேகமான பெண்களுக்கு அந்தரங்கங்களில் எரிச்சல், எண்ண தடுமாற்றங்கள், வயிற்று பிடிப்புகள் போன்ற பிரச்சினைகள் இருக்கும்.

வீட்டில் இருக்கும் பெண்களை விட வேலைக்கு செல்லும் பெண்கள் அநேகமான சிரமங்களை எதிர்கொள்கின்றனர்.

இதனை தொடர்ந்து மாதவிடாய் காலப்பகுதியில் ஏற்படும் வலியை கட்டாயம் பெண்கள் தாங்கிக் கொள்ள வேண்டும் என்ற அவசியமில்லை.

வீட்டிலுள்ள சில பொருட்களை வைத்து நாம் மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வலியை குறைத்து கொள்ளலாம்.

மாதவிடாய வலியை குறைக்கும் மூலிகைகள்

மாதவிடாயினால் ஏற்படும் வலியை நொடிப்பொழுதில் இல்லாமலாக்கும் கை மருந்து! | Helps To Get Rid Of Menstrual Pain

1. இஞ்சி

பொதுவாக சந்தையில் மிக இலகுவாக பெறக்கூடிய மூலிகைப் பொருள் தான் இஞ்சி. இதில் டீ மற்றும் மசாலா செய்து உணவில் சேர்த்து சாப்பிட்டால் எண்ணற்ற வியாதிகள் குணமாகின்றது. இஞ்சி எடுத்துக் கொள்வதன் மூலமாக மாதவிலக்கு கால வலிக்கு நிவாரணம் கிடைக்கும். அத்துடன் அலற்றி பிரச்சினை இருந்தால் அதுவும் நொடிப் பொழுதில் இல்லாமல் போகும்.

மாதவிடாயினால் ஏற்படும் வலியை நொடிப்பொழுதில் இல்லாமலாக்கும் கை மருந்து! | Helps To Get Rid Of Menstrual Pain

2. பார்லி

மாதவிடாய் காலங்களில் பெண்களின் வயிற்று வலியை குறைக்கும் மூலிகைகளில் பார்லியும் ஒன்று. இதிலுள்ள மெக்னீசியம் வலியை சிம்பிளாக குறைக்கும். இது தவிர இரும்புச்சத்து, கால்சியம் மற்றும் விட்டமின் பி ஆகிய சத்துக்களும் பார்லியில் உள்ளன. பொதுவாக மாதவிலக்கு காலத்தில் பெண்களுக்கு வயிறு உப்புசம் மற்றும் நீர்ச்சத்து குறைபாடு போன்றவை ஏற்படும்.

மாதவிடாயினால் ஏற்படும் வலியை நொடிப்பொழுதில் இல்லாமலாக்கும் கை மருந்து! | Helps To Get Rid Of Menstrual Pain

3. வெந்தயம்

வீடுகளில் இது மட்டும் இல்லாமல் இருக்காது. அந்தளவு சக்தி வாய்ந்த மூலிகை இது. மாதவிடாய் காலங்களில் வெந்தய தண்ணீர் குடித்தால் வயிற்று வலி இலகுவாக குறையும்.

மாதவிலக்கு வலி ஏற்படும்போது ஒரு கப் வெந்நீரில் வெந்தயம் மற்றும் தேன் சேர்த்து அருந்தலாம். தினசரி 3 முறை இதனை எடுத்துக் கொள்ளலாம்.