இந்தியாவில் மரணமடையும் 4 பேரில் ஒருவருக்கு இதயம் சம்பந்தமான பிரச்சனைகள் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.
உங்கள் தமனிகள் மற்றும் இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க நீங்கள் தவிர்க்க வேண்டிய உணவுகள் பற்றி கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க…
ஐஸ்கிரீம்
இதில் நிறைவுற்ற கொழுப்பு மற்றும் கலோரிகள் அதிகம் உள்ளன, இது எடை அதிகரிப்பதற்கும் மோசமான இதய ஆரோக்கியத்திற்கும் காரணமாக அமைகிறது.
கூல்டிரீங்ஸ்
இது உங்கள் இன்சுலின் அளவை அதிகரிக்கலாம், எடை அதிகரிப்பை ஊக்குவிக்கலாம் மற்றும் உங்கள் வளர்சிதை மாற்ற ஆரோக்கியத்தை கெடுக்கலாம். சோடாவிற்கு பதிலாக பழசாறுகள் அல்லது எலுமிச்சை ஜூஸ் போன்றவற்றை உட்கொள்வது நல்லது.
பிரெஞ்சு பிரைஸ்
ரத்தத்தில் சர்க்கரையின் அளவை உடனடியாக அதிகரிக்கச் செய்கிறது. மேலும் இதில் உள்ள அதிக உப்பு மற்றும் கொழுப்பு இதயத்திற்கு ஆபத்தானதாக அமைகிறது.
பீட்சா
இதயத்திற்கு ஆபத்தான நிறைவுற்ற கொழுப்பைக் கொண்ட உணவுகளின் பட்டியலில் பீட்சா இரண்டாவது இடத்தில் உள்ளது. குறைவாக ஆசைக்கு எடுத்துக் கொள்ளலாம்.
ஃபிரைடு சிக்கன்
கோழியை எண்ணெய்யில் டீப் பிரை செய்யப்பட்டு உண்டால் கொலஸ்ட்ரால் அளவை அதிகரிக்கும். அதனை தவிர்த்தல் நல்லது.
இறைச்சி
இதய பிரச்சினைகள் மற்றும் உடல் பருமன் உள்ளவர்கள் எப்போதும் பதப்படுத்தப்பட்ட இறைச்சி மற்றும் சிவப்பு இறைச்சியிலிருந்து விலகி இருப்பது நல்லது.