21 ஆம் நூற்றாண்டின் மோசமான நெருக்கடியை கனடா எதிர்கொள்கிறது: அமைச்சர் வெளிப்படை

0
157

கனடா 21ம் நூற்றாண்டின் மிக மோசமான காட்டுத்தீயை எதிர்கொள்வதாக அமைச்சர் பில் பிளேயர் அறிவித்துள்ளார்.

கனடாவில் தற்போது இந்த ஆண்டு மட்டும் இதுவரை காட்டுத்தீயால் 47,000 சதுர கிலோமீற்றர்கள் எரிந்து சேதமாகியுள்ளது. மட்டுமின்றி கனடா முழுவதும் 431 இடங்களில் காட்டுத்தீ பற்றியெரிந்து வருவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

21ம் நூற்றாண்டின் மிக மோசமான நெருக்கடியை கனடா எதிர்கொள்கிறது: அமைச்சர் வெளிப்படை | Worst Wildfire Season Canada Experiencing

அதில் ஒன்று ஆல்பர்ட்டாவின் எட்ஸன் பகுதி மக்களை கடுமையாக அச்சுறுத்தி வருகிறது. 8,400 குடியிருப்பாளர்கள் வெளியேற்றப்படும் நெருக்கடியில் உள்ளனர். பிரிட்டிஷ் கொலம்பியாவில் நூற்றுக்கணக்கான மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர் அல்லது வெளியேற்றப்படும் நெருக்கடியில் உள்ளனர்.

சுமார் 4, 660 சதுர கிலோமீற்றர்கள் பற்றியெரிந்து வருகிறது. இதுவரை பதிவானதில் மாகாணத்திலேயே இரண்டாவது பெரிய காட்டுத்தீ இதுவாகும் என கூறுகின்றனர். நோவா ஸ்கோடியாவில் Shelburne மாவட்டத்தில் ஏற்பட்ட பாரிய தீ கட்டுப்பாட்டை இழந்துள்ளது.

21ம் நூற்றாண்டின் மிக மோசமான நெருக்கடியை கனடா எதிர்கொள்கிறது: அமைச்சர் வெளிப்படை | Worst Wildfire Season Canada Experiencing

இருப்பினும் 235 சதுர கிலோமீற்றர் பரப்பளவில் உள்ள பாரிங்டன் ஏரி காட்டுத்தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாக அதிகாரிகள் கூறுகின்றனர். கனடா முழுவதும் பல நாடுகளில் இருந்து சுமார் 5,000 தீயணைப்பு வீரர்கள் உதவிக்கு களமிறக்கப்பட்டுள்ளனர்.

வரும் நாட்களில் சிலி, கோஸ்டாரிகா, ஸ்பெயின் மற்றும் போர்ச்சுகலில் இருந்து நூற்றுக்கணக்கானோர் வருவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.