வேத ஜோதிடத்தின் படி, பணமழையால் நனைய போகும் 3 ராசிக்காரர்கள்..

0
205

வேத ஜோதிடத்தின் படி கிரகங்கள் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளியில் ராசியை மாற்றும்.

அப்படி மாற்றும் போது சில சமயங்களில் யோகங்கள் உருவாகலாம். அவ்வாறு உருவாகும் யோகங்கள் அனைத்து ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும்.

அந்த வகையில் நவகிரகங்களின் தளபதியாக கருதப்படுபவர் செவ்வாய்.

செவ்வாய் தைரியம், வீரம் ஆகியவற்றின் காரணியாவார். செவ்வாய் இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை ராசியை மாற்றுவார்.

இதனால் செவ்வாய் பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே நன்கு தெரியும். சமீபத்தில் செவ்வாய் சந்திரனின் கடக ராசிக்குள் நுழைந்தார்.

இது செவ்வாயின் பலவீனமான ராசியாகும். கடக ராசியில் செவ்வாய் நுழைந்ததும், நீச்சபங்க ராஜயோகம் உருவானது.

இந்த யோகத்தினால் 3 ராசிக்காரர்களின் செல்வம் அதிகரிப்பதோடு, சமூகத்தில் மரியாதையும் அதிகரிக்கும். 

பணமழையால் நனைய போகும் 3 ராசிக்காரர்கள் | 3 Zodiac Signs That Will Get Wet With Money

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களுக்கு நீச்சபங்க ராஜயோகமானது சாதகமான பலன்களை வழங்கும்.

ஏனெனில் மிதுன ராசியின் 12 ஆவது வீட்டில் செவ்வாய் உள்ளார்.

பணிபுரிபவர்கள்

இதனால் பணிபுரிபவர்களுக்கு பல புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும்.

அந்த வாய்ப்புக்களை பயன்படுத்திக் கொண்டால், தொழில் வாழ்வில் நல்ல முன்னேற்றத்தைக் காணலாம்.

கடன்

கடனாக கொடுத்த பணம் திரும்ப கிடைக்கும். இவ் ராசியினருடைய பேச்சு மற்றவர்களை ஈர்க்கும் வகையில் இருக்கும்.

இதனால் ஊடகம், மார்கெட்டிங், வணிகத் துறையில் இருப்பவர்களுக்கு அற்புதமாக இருக்கும்.

பணமழையால் நனைய போகும் 3 ராசிக்காரர்கள் | 3 Zodiac Signs That Will Get Wet With Money

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு நீச்சபங்க ராஜயோகம் நற்பலனை அளிக்கும். ஏனெனில் கன்னி ராசியின் 11 ஆவது வீட்டில் செவ்வாய் உள்ளார்.

வருமானம்

இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு வருமானத்தில் அதிகரிப்பு ஏற்படும். புதிய வருமான ஆதாரங்கள் உருவாக்கும் வாய்ப்புக்கள் கிடைக்கும்.

முதலீடு

சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். ஏற்கனவே முதலீடுகளை செய்திருந்தால், இக்காலத்தில் நல்ல லாபம் கிடைக்கும்.

நிதி

நிதி ரீதியாக இக்காலம் மிகவும் அற்புதமாக இருக்கும். முக்கியமாக சிக்கிய பணம் கைக்கு வந்து சேரும். 

பணமழையால் நனைய போகும் 3 ராசிக்காரர்கள் | 3 Zodiac Signs That Will Get Wet With Money

மேஷம்

மேஷ ராசிக்காரர்களுக்கு நீச்சபங்க ராஜயோகமானது நல்ல நிதி நன்மைகளை வழங்கும். ஏனெனில் மேஷ ராசியின் 4 ஆவது வீட்டில் செவ்வாய் உள்ளார்.

வாகனம் மற்றும் சொத்து

இதனால் இந்த ராசிக்காரர்கள் வாகனம் மற்றும் சொத்துக்களை வாங்கும் வாய்ப்புள்ளது.

நல்ல சம்பளத்துடனான வேலை கிடைக்கும் வாய்ப்புள்ளது.

பணிபுரிபவர்கள்

பணிபுரிபவர்களுக்கு சம்பள உயர்வு கிடைக்கலாம்.

தாயாரின் ஆதரவு கிடைக்கும். ரியல் எஸ்டேட் தொழில் செய்பவர்களுக்கு, இக்காலம் நல்ல அதிர்ஷ்டமான காலமாக இருக்கும்.