ஜனாதிபதி தேர்தலுக்கு முன் எந்தவொரு  தேர்தலும் இல்லை…!

0
151

ஜனாதிபதித் தேர்தலுக்கு முன் எந்தவொரு தேர்தலும் இடம்பெறாது என கொழும்பு அரசியல் வட்டார தகவல்களை மேற்கோள்காட்டி கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அந்தச் செய்தியில் குறித்த தினத்துக்கு முன் ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதில்லை என்று ரணில் விக்ரமசிங்க தீர்மானித்துள்ளார் என அறிய முடிகின்றது. அடுத்த வருடம் ஓகஸ்ட் மாதத்தின் பின்பே ஜனாதிபதித் தேர்தல் நடைபெறும்.

ஆனால் அந்தத் தேர்தலை இலக்கு வைத்து இப்போதே அடிப்படை வேலைத்திட்டங்களை முன்னெடுப்பதற்கு ஜனாதிபதி தீர்மானித்துள்ளார் என்று அரச தரப்பு தகவல்கள் கூறுகின்றன.

ஜனாதிபதித் தேர்தலுக்கு முன் எந்தவொரு தேர்தலும் இல்லை..! | Ranil Plan Presidential Election

தேர்தல் ஒத்திவைப்பு

அதற்கு முன்னதாக உள்ளூராட்சி சபைத் தேர்தலையும் மாகாண சபைத் தேர்தலையும் அரசாங்கம் நடத்த வேண்டும். ஆனால் அரசு தேர்தலை நடத்துவதற்குப் பணமில்லை என்று கூறி உள்ளூராட்சி சபைத் தேர்தலை காலவரையறை இன்றி ஒத்திப்போட்டுள்ளது.

மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் இறுதி முடிவு இல்லை. எப்படியும் ஜனாதிபதித் தேர்தலுக்கு முன் எந்தவொரு தேர்தலும் இடம்பெறாது என்பது தெளிவாகின்றது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

ஜனாதிபதித் தேர்தலுக்கு முன் எந்தவொரு தேர்தலும் இல்லை..! | Ranil Plan Presidential Election