சீனாவின் ஆதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி – அமெரிக்காவின் அடுத்த நகர்வு யுனெஸ்கோ…!

0
182

ஐக்கிய நாடுகள் சபையின் கலாசார மற்றும் அறிவியல் அமைப்பான ‘யுனெஸ்கோ’ அமைப்பில் 12 ஆண்டுக்கு பின் மீண்டும் இணைய அமெரிக்கா முடிவு செய்துள்ளது.

அமெரிக்காவின் மீள் வருகையானது யுனெஸ்கோ அமைப்பில் ஆதிக்கம் செலுத்தும் சீனாவின் இடத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விடயமாக கருதப்படுகிறது. 

பாலஸ்தீனத்தை ஒரு உறுப்பினராக சேர்க்க யுனெஸ்கோ அமைப்பு 2011 இல் முடிவு செய்தது.

அமெரிக்காவின் இடத்தில் சீனா

America china crisis

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அமைப்பில் இருந்து அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகள் வெளியேறின. 193 நாடுகள் உறுப்பினர்களாக கொண்ட யுனெஸ்கோ அமைப்பின் முக்கிய நன்கொடையாளராக அமெரிக்கா காணப்பட்டது.

இந்த அமைப்புக்கான நிதியில் 22 சதவீதத்தை அமெரிக்கா வழங்கி வந்ததால் அமெரிக்காவுக்கு முன்னுரிமை கிடைத்து வந்தது. இந்த முறுகல் நிலை காரணமாக அமெரிக்கா வெளியேறியதைத் தொடர்ந்து அமெரிக்காவின் இடத்தை இடத்தை சீனா கைப்பற்றியது.

https://twitter.com/UNESCO/status/1668210693751939073?s=20

5,100 கோடி ரூபா நிலுவை

us rejoin unesco

யுனெஸ்கோ அமைப்பில் சீனாவின் ஆதிக்கம் தற்போது அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் யுனெஸ்கோ அமைப்பில் மீண்டும் இணைய அமெரிக்கா முடிவு செய்துள்ளதுள்ளதாக அமெரிக்காவை மேற்கோள் காட்டி சர்வதேச ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

கடந்த 12 ஆண்டுகளுக்கான நிலுவை உள்பட 5,100 கோடி ரூபாயை செலுத்தவும் அமெரிக்கா முன்வந்துள்ளது.

இந்நிலையில் அடுத்த மாதம் இடம்பெறவுள்ள யுனெஸ்கோ கூட்டத்தில் அமெரிக்காவை மீண்டும் சேர்ப்பதற்கான வாக்கெடுப்பு நடக்க உள்ளதாக யுனெஸ்கோ அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.