ரஷ்ய நகரத்தை தாக்கிய ஆளில்லா விமானத்தினால் பரபரப்பு! மக்கள் வெளியேற்றம்

0
177

உக்ரைன் – ரஷ்ய போர் மீண்டும் தீவிரமடைந்து வரும் நிலையில் ரஷ்யாவின் வோரோனேஜ் நகரில் உள்ள குடியிருப்பு கட்டடத்தை ஆளில்லா விமானமொன்று தாக்கியுள்ளமையினால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ரஷ்யாவின் தெற்கு நகரமான Voronezh-ல் வெள்ளிக்கிழமை குடியிருப்பு கட்டடமொன்றில் ஆளில்லா விமானம் மோதியதில் இரண்டு பேர் காயமடைந்துள்ளதாக ஆளுநர் அலெக்சாண்டர் குசேவ் டெலிகிராமில் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், உக்ரைன் மீண்டும் எதிர்தாக்குதலுக்கு தயாராகி வருவதாக செய்திகள் வெளியான நிலையில், ரஷ்யாவின் பல நகரங்களை ஆளில்லா விமானங்கள் தாக்கியுள்ளன.

ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றம்

தற்போது, சுமார் 10 இலட்சம் மக்கள் வசிக்கும் நகரமான Voronezh-ல் ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதுடன், உக்ரைனுக்கு நெருக்கமாக இருக்கும் ரஷ்யா எல்லை நகர பகுதியில் அமைந்துள்ள Voronezh நகரில் ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இந்த தாக்குதலில் இருவர் காயமடைந்துள்ளதாகவும் ஆளுநர் உறுதிப்படுத்தியுள்ளார்.

ரஷ்யாவின் பெல்கொரோட் பகுதி, இந்த மாதம் பலத்த ஷெல் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதுடன், எல்லையோர நகரங்களிலிருந்து ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.