உலக சாதனைக்கு தயாராகும் மலைய இரட்டையர்கள்!

0
280

மலையகத்தை சேர்ந்த இரட்டையர்கள் யாழ்ப்பாணம் தொடக்கம் காலி வரை 566 கிலோமீட்டர் தூரத்தை மூன்று நாட்களில் ஓய்வு எடுக்காமல் நடந்து உலக சாதனை நிலைநாட்டவுள்ளனர்.

அத்தோடு இவர்கள் எதிர்வரும் 14 ஆம் திகதி முதல் 16 ஆம் திகதி வரை தமது சாதனை நடை பயணத்தை யாழில் இருந்து தொடரவுள்ளனர்.

பொகவந்தலாவை கொட்டியாக்கலை தோட்டத்தை சேர்ந்த ஆர்.ஏ. விக்னேஷ்வரன் மற்றும் தயாபரன் ஆகிய இரட்டை சகோதர்கள் இந்த சாதணை பயணத்தை தொடரவுள்ளனர்.

இந்த சாதனை பயணத்தை மேற்கொண்டு உலக சாதனையில் இடம் பிடிப்பதற்கான அனுமதி கடிதம் இவர்களுக்கு விளையாட்டு அபிவிருத்தி திணைக்களத்தினால் வழங்கப்பட்டுள்ளது.

உலக சாதனைக்கு தயாராகும் இரட்டையர்கள் | Twins Preparing For World Record

இதற்கு முன்னர் இவர்கள் யாழில் இருந்து காலி வரையிலான 566 கிலோமீட்டர் தூரத்தை நான்கு நாட்கள் நடந்து சாதனை படைத்துள்ளனர்.

அது மட்டுமன்றி புத்தளத்திலிருந்து சீதுவை வரையிலான 147 கிலோமீட்டர் தூரத்தினை வெறுமனே ஆறு மணி நேரத்திலும் பயணித்து சாதனை படைத்துள்ளதுனர்.

மேலும் கொழும்பில் இருந்து பொகவந்தலாவை வரையிலான 184 கிலோமீட்டர் தூரத்தை 18.5 மணித்தியாலங்களில் நடந்து சாதனை படைத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.