கஜேந்திரகுமார் வேண்டுமென்றே கைது செய்யப்பட்டார்: காரணத்தை விளக்கிய செல்வராஜா கஜேந்திரன்(Video)

0
538

அண்மையில் மருதங்கேணியில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் இன்றைய தினம் (07.06.2023) நாடாளுமன்றத்தில் உரையாற்ற இருந்த தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தை வேண்டுமென்றே பொலிஸார் கைது செய்துள்ளதாக யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கைது செய்தமை தொடர்பில் ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

மேலும் செல்வராஜா கஜேந்திரன் தெரிவித்துள்ளதாவது, மருதங்கேணியில் வைத்து, புலனாய்வாளர்கள் தன்னை தாக்கிச் சுடுவதற்கு முயற்சி செய்தமை தொடர்பாக இன்றைய தினம் (07.06.2023) கஜேந்திரகுமார் பொன்னம்பலம், நாடாளுமன்றத்தில் உரையாற்றவிருந்தார்.

அத்துடன், மருதங்கேணி பொலிஸ் பிரிவில் வாக்குமூலம் கொடுப்பது தனக்கு ஆபத்து என்பதனை சுட்டிக்காட்டியும் தனக்கு இழைக்கப்பட்ட சிறப்புரிமை மீறல் தொடர்பாகவும் மிகத் தெளிவான ஒரு அறிக்கை ஒன்றை இன்றைய தினம் நாடாளுமன்றத்தில் முன்வைத்து உரையாற்றவிருந்தார்.

இந்த உரை இடம்பெறாமல் தடுக்க வேண்டுமென்ற ஒரே காரணத்திற்காக அவர் கைது செய்யப்பட்டுள்ளார் எனத் தெரிவித்துள்ளார்.

video source from Lankasri