வாய்விட்டு சிரிக்க கட்டணம் வசூலிக்கும் ஜப்பான்!

0
101

கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு உலகில் கொரோனா தொற்று உச்ச கட்டத்தை எட்டி லட்சக்கணக்கானோர் பலியான நிலையில் மக்கள் உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் மிகவும் பாதிக்கப்பட்டனர்.

இதன் தாக்கத்தால் ஜப்பானியர்கள் சிரிக்கவே மறந்துவிட்டார்கள். கொரோனா பரவாமல் இருக்க அவர்கள் கடைபிடித்த முககவசம் அணியும் பழக்கமும் அதன் ஒரு காரணம் என்று ஆராய்ச்சியில் கூறப்படுகிறது.

 சிரிக்க கற்றுக் கொடுக்கும் வகுப்பு

தொடர்ச்சியாக முக கவசம் அணிந்து அவர்கள் சிரிக்கவே மறந்துவிட்டார்களாம். ஜப்பானிய அரசு கொரோனா தொற்று கட்டுப்பாடில் இருந்து முக கவசம் அணிவதற்கு கட்டாயம் இல்லை என்ற போதும் இன்றும் பலர் முக கவசம் அணிந்து தான் வெளியே செல்கிறார்கள்.

வாய்விட்டு சிரிக்க கட்டணம் வசூலிக்கும் நாடு! | Laugh Class Japan

அங்குள்ள 8 சதவீத மக்கள் மட்டுமே முக கவசம் அணிவதை நிறுத்தியுள்ளதாக கடந்த பெப்ரவரி மாதம் நடத்திய ஆய்வு ஒன்றின் மூலம் தெரியவந்துள்ளது.

இந்நிலையில், டோக்கியோவில் உள்ள கலை கல்வி நிறுவனம் ஒன்று சிரிக்க மறந்த ஜப்பானிய மக்களுக்கு சிரிக்க கற்றுக்கொடுக்கும் வகுப்புகளை எடுத்து வருகிறது.

https://twitter.com/MorningBrew/status/1656415062796500992?s=20

இந்த வகுப்பை முன்னாள் வானொலி தொகுப்பாளர் கெய்கோ கவானோவே எடுத்து வருகிறார். ஒரு மணி நேரத்திற்கு சுமார் இந்திய ரூபாய் 15,943/= செலுத்தி ஜப்பானிய மக்கள் பலர் சேர்ந்து பயிற்சி பெற்று வருகின்றனர்.

இதன் போது சிரிப்பின் முக்கியத்துவம் பற்றியும் எப்படி சிரிக்க வேண்டும் என்றும் ஹாலிவுட் ஸ்டைல் ஸ்மைலிங் நுட்பங்களை கற்கவும் சொல்லி கொடுக்கப்படுகிறது.

இந்நிலையில் கையில் கண்ணாடி ஒன்றை வைத்துக் கொண்டு அவர்கள் சிரிக்க பயிற்சி எடுக்கும் போது பிடிக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.