அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி..

0
227

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இந்த வருடத்தில் 24.2 வீதத்தால் அதிகரித்துள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

ரூபாவின் பொறுமதி தொடர்பில் மத்திய வங்கி வெளியிட்ட அறிக்கையின்படி

இலங்கை ரூபா ஜப்பானிய யெனுக்கு எதிராக 30 வீதத்தாலும், பிரித்தானிய பவுண்டிற்கு எதிராக 19.4 வீதத்தாலும் மிகைப்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் யூரோவுடன் ஒப்பிடுகையில் ரூபாவின் பெறுமதி 23 வீதமும் இந்திய ரூபாயுடன் ஒப்பிடுகையில் 23.5 வீதமும் அதிகரித்துள்ளதாக மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.