இலங்கையை பாராட்டிய IMF பணிப்பாளர்!

0
247

பொருளாதார சீர்திருத்தங்களை அமுல்படுத்துவதில் இலங்கை ‘வலுவான அர்ப்பணிப்பை’ காட்டி வருவதாக சர்வதேச நாணய நிதியத்தின் பிரதி முகாமைத்துவ பணிப்பாளர் கென்ஜி ஒகாமுரா தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கான தமது விஜயத்தின் போது அவர் இதனை தெரிவித்ததாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்நிலையில் சவாலான பொருளாதார சூழலுக்கு மத்தியில் இந்த வேகத்தை இலங்கை அரசாங்கம் தொடர வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.

இலங்கையை பாராட்டிய IMF பணிப்பாளர்; எதற்காக தெரியுமா! | Imf Director Praises Sri Lanka You Know Why

மேலும் இலங்கையின் கடனாளிகளுடனான தொடர்ச்சியான வெளிப்படையுடன் கூடிய உரையாடல் மறுசீரமைப்பு உடன்படிக்கைகளை அடைய உதவும் என்றும் சர்வதேச நாணய நிதியத்தின் பிரதி முகாமைத்துவ பணிப்பாளர் கென்ஜி ஒகாமுரா தெரிவித்துள்ளார்.