யாழில் உயிரிழந்த சிறுமி! இளைஞர்களின் செயலை பாராட்டும் மக்கள்

0
217

யாழ்ப்பாணம் – தென்மராட்சி மிருசுவில் பகுதியில் பாதுகாப்பற்ற வீட்டு கிணற்றில் விழுந்து சிறுமி ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இச்சம்பவம் கடந்த சனிக்கிழமை (27-05-2023) அன்று இடம்பெற்றுள்ளது.

சம்பவ தினத்தன்று மிருசுவில் வடக்கு இளைஞர்களால் குறித்த கிணறு மூடப்பட்டு அவ்வீட்டிற்கு குழாய்க்கிணறு அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளது.

யாழில் பரிதாபமாக உயிரிழந்த சிறுமி! இளைஞர்களின் செயலை பாராட்டும் மக்கள் | Girl Fell Into A Well In Died Jaffna Youths Action

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

தென்மராட்சி மிருசுவில் வடக்கு, மிருசுவிலில் வசித்து வந்த சசிகரன் கிங்சிகா என்ற 6 வயது சிறுமி கடந்த சனிக்கிழமை வீட்டிலிருந்த பாதுகாப்பற்ற கிணற்றில் தவறி விழுந்துள்ளார்.

இந்த நிலையில் சிறிது நேரம் கழித்து சிறுமியை காணாத நிலையில் பெற்றோர்கள் தேடிய போது கிணற்றில் சிறுமி வீழ்ந்தமை தெரியவந்துள்ளது.

இதனையடுத்து உடனடியாக குறித்த சிறுமி மீட்கப்பட்டு கொடிகாமம் பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு பின்னர் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

யாழில் பரிதாபமாக உயிரிழந்த சிறுமி! இளைஞர்களின் செயலை பாராட்டும் மக்கள் | Girl Fell Into A Well In Died Jaffna Youths Action

இந்த நிலையில் மிருசுவில் வடக்கு இளைஞர்கள் ஒன்றிணைந்து ஊர்மக்களின் பங்களிப்புடன் இன்றையதினம் அவ்வீட்டிற்கு புதிதாக குழாய்க்கிணறு அடித்துக் கொடுத்துள்ளனர்.

அதேவேளை குழாய்க்கிணறு அமைக்கப்ட்டதையடுத்து உடனடியாக பாதுகாப்பற்ற கிணறு இளைஞர்களால் இடித்து அழிக்கப்பட்டு தூர்வையாக்கப்பட்டது.

இந்நிலையில் குறித்த இளைஞர்களின் மனிதாபிமான செயற்பாட்டிற்கு பலரும் தமது பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.

Gallery
Gallery
Gallery