28 நாட்களில் இரண்டு முறை கர்ப்பமான பிரித்தானிய பெண்; பிரசவத்தில் நடந்த அதிசயம்

0
198

பிரித்தானிய பெண் ஒருவர் 28 நாட்களில் இரண்டு முறை கர்ப்பமாகி, இரண்டு குழந்தைகளையும் ஒரே நாளில் பெற்றெடுத்துள்ளார்.

4 வரங்களுக்குப் பிறகு 2-வது முறை கருவுற்ற பெண்

பிரித்தானியாவில் உள்ள ஒரு “super-fertile” என்று சொல்லக்கூடிய பெண் ஒருவர் கருவுற்ற நான்கு வாரங்களுக்குப் பிறகு இரண்டாவது முறையாக கருவுற்றார். குழந்தைகள் பிறக்கும் வரை அப்பெண் தன உடலில் நடந்த அதிசயத்தை உணரவில்லை.

சோஃபி ஸ்மால் (Sophie Small) எனும் 30 வயது பெண் ஆகஸ்ட் 2020-ல் ஹோலி மற்றும் டார்சி என இரு மகள்களைப் பெற்றெடுத்தார், முதலில் அவர்கள் இருவரையும் இரட்டையர்கள் என்று தவறாகக் கருதினார்.

மருத்துவர்கள் குழப்பம்

டார்சி 4 பவுண்டுகள், 2 அவுன்ஸ் எடையுடனும், ஹோலிக்கு 6 பவுண்டுகள், 1 அவுன்ஸ் எடையுடனும் இருந்ததால், மருத்துவச்சிகள் இரட்டையர்களின் அளவு வேறுபாடுகளால் குழப்பமடைந்தனர்.

பின்னர், முதல் கர்ப்பத்திற்குப் பிறகு இரண்டாவது கர்ப்பம் உருவாகும் நிலையில், சூப்பர்ஃபெடேஷன் (superfetation) காரணமாக ஒரு மாத இடைவெளியில் இரண்டாவது முறையாக பெண் கருவுற்றதை மருத்துவர்கள் கண்டுபிடித்தனர்.

அப்பெண் வெவ்வேறு நிலைகளில் வளரும் இரண்டு குழந்தைகளை தனது கருவில் சுமந்து கொண்டிருந்தார்.

28 நாட்களில் இரண்டு முறை கர்ப்பமான பிரித்தானிய பெண்: பிரசவத்தில் நடந்த அதிசயம் | Uk Woman Pregnant Twice In 28 Days Gives Birth

சோதனையில் தெரியவந்த உண்மை

அளவு வித்தியாசத்தில் பெண் குழந்தைகள் பிறந்த பிறகுதான் மருத்துவர்கள் சோதனை நடத்தி, குழந்தைகள் இரட்டையர்கள் அல்ல என்பதைக் கண்டறிந்தனர்.

டார்சி 32 வார குழந்தை மற்றும் ஹோலி 36 வார குழந்தை ஆவார்.

வழக்கமாக ஒரே பிரசவத்தில் பிறக்கும் இரண்டு குழந்தைகள் இரட்டையர்கள் என்று அழைக்கப்படுவர், மேலும். அவர்கள் இருவருக்கும் இடையே பிறப்பில் சில நிமிடங்கள் மட்டுமே வித்தியாசம் இருக்கும்.

ஆனால், இந்த சூழலில், இரண்டு குழந்தைகளில் ஒருவர் மற்றொருவரைவிட பல வாரம் மூத்தவர் என்பது நம்பமுடியாத உண்மையாக உள்ளது.

28 நாட்களில் இரண்டு முறை கர்ப்பமான பிரித்தானிய பெண்: பிரசவத்தில் நடந்த அதிசயம் | Uk Woman Pregnant Twice In 28 Days Gives Birth

Superfetation என்றால் என்ன?

சூப்பர்ஃபெடேஷன் என்பது இரண்டு கர்ப்பங்களின் ஒரே நேரத்தில் நிகழ்வை விவரிக்கப் பயன்படுத்தப்படும் சொல். முதல் கருமுட்டை கருப்பையில் பொருத்தப்பட்ட நாட்கள் அல்லது வாரங்களுக்குப் பிறகு, இரண்டாவது கருமுட்டையானது விந்தணுக்களால் கருத்தரிக்கப்படுகிறது. ஹெல்த்லைன் படி, அவர்கள் ஒரே நாளில் மற்றும் ஒரே பிரசவத்தின் போது பிரசவிக்கப்படலாம் என்பதால், சூப்பர்ஃபெடேஷன் மூலம் பிறக்கும் குழந்தைகள் அடிக்கடி இரட்டையர்களாக கருதப்படுகிறார்கள்.