அமெரிக்க மக்களை வேட்டையாடும் மருந்துக்கு பிரித்தானியாவில் முதல் பலி; எச்சரிக்கும் நிபுணர்கள்

0
187

அமெரிக்க மக்களிடையே பிரபலமாகியுள்ள ஊன் உண்ணும் ஜாம்பி போதை மருந்துக்கு பிரித்தானியாவில் ஒருவர் பலியாகியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவில் 107,000 மக்கள் பலி

பிரித்தானியாவில் சோலிஹல் பகுதியை சேர்ந்த 43 வயதான கார்ல் வார்பர்டன் என்பவரே ஊன் உண்ணும் ஆபத்தான அந்த போதை மருந்துக்கு பலியானவர்.

தொடர்புடைய ஆபத்தான போதை மருந்துக்கு பலியான முதல் பிரித்தானியர் இவர் என கூறப்படுகிறது. ஜாம்பி மருந்து என அறியப்படும் Xylazine எடுத்துக் கொள்வதால், அதன் பக்கவிளைவாக உடல் பாகங்கள் சேதமடையும் எனவும், காயங்கள் ஒருபோதும் ஆறாது என்றும் கூறுகின்றனர்.

2021ல் மட்டும் அமெரிக்காவில் தொடர்புடைய போதை மருந்தால் 107,000 மக்கள் பலியாகியுள்ளனர். பிரித்தானியாவில், ஃபெண்டானில் மற்றும் ஹெராயின் கலவையை கார்ல் பயன்படுத்திய நிலையில் கடந்த ஆண்டு மே மாதம் மரணமடைந்துள்ளார் என தெரியவந்துள்ளது.

ஆனால் போதை மருந்து தொடர்பான நிபுணர் ஒருவர் தெரிவிக்கையில், தொடர்புடைய ஆளைக் கொல்லும் போதை மருந்துக்கு பலியாகும் முதல் பிரித்தானியர் இந்த வெஸ்ட் மிட்லாண்ட்ஸ் பகுதியை சேர்ந்த கார்ல் அல்ல எனவும், கடைசி நபர் இவராக இருக்கவும் வாய்ப்பில்லை என குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய Xylazine போதை மருந்தானது எளிதில் கண்டறிவது கடினம் என்பதால், பாதிப்புக்கு உள்ளான பலர் அடையாளம் காணப்படாமல் போகலாம் என கூறுகின்றனர்.

மனிதர்களுக்கு ஆபத்தை விளைவிக்கும்

அமெரிக்காவில் விலங்குகளுக்கு பயன்படுத்தும் வகையில், அரசாங்கத்தால் அனுமதிக்கப்பட்டுள்ளது. ஆனால் மனிதர்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் என்றே எச்சரிக்கப்பட்டுள்ளது.அமெரிக்க மக்களை வேட்டையாடும் மருந்துக்கு பிரித்தானியாவில் முதல் பலி: எச்சரிக்கும் நிபுணர்கள் | Flesh Eating Drug First Death Uk

போதை மருந்து ஊசி போட்டுக்கொள்ளும் பகுதியில் நாளடைவில் புண் ஏற்படும் எனவும், சுற்றியுள்ள சதைகள் அழுகி தொற்றுநோயை ஏற்படுத்தும் எனவும் கூறுகின்றனர். சமயங்களில் உடல் பாகங்களை துண்டிக்கப்படும் நெருக்கடியும் ஏற்படலாம்.

கார்ல் தொடர்பான உடற்கூறு ஆய்வில், அவர் மரணத்திற்கு காரணங்களில் ஒன்று Xylazine போதை மருந்து என குறிப்பிடப்பட்டு இருந்தாலும், நேரடியான காரணம் அதுவல்ல என குறிப்பிட்டுள்ளனர்.

Xylazine போதை மருந்து தொடர்பில் அவரது சகோதரர் ஒருவரும் கவலை தெரிவித்துள்ளார். பொலிசார் வெறும் போதை மருந்தால் ஏற்பட்ட மரணம் என்றே கருதுகின்றனர். ஆனால் அதன் பின்னணி தொடர்பில் தீவிர நடவடிக்கை எதையும் எடுப்பதில்லை என குற்றஞ்சாட்டியுள்ளார்.