திருகோணமலையில் பாடசாலை மாணவனை கடத்த முயற்சி

0
193

14 வயது பாடசாலை மாணவனை வேனில் கடத்திச் செல்ல முயற்சிக்கப்பட்ட சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது.

இச்சம்பவம் தொடர்பில் திருகோணமலை தலைமையக பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

திருகோணமலை பாலையூற்று பகுதியில் பாடசாலை மாணவர் ஒருவரை சிலர் கடத்த முயற்சித்த சம்பவம் தொடர்பில் திருகோணமலை தலைமையக பொலிஸாருக்கு நேற்று (24) தகவல் கிடைத்துள்ளது.

தமிழர் பகுதியில் பாடசாலை மாணவனை கடத்த முயற்சி | Kidnapped A School Student In A Tamil Area

குறித்த மாணவன் சம்பவ தினத்தன்று மாலை 4 மணியளவில் தனியார் வகுப்பொன்றில் கலந்துகொண்டு விட்டு திரும்பிக் கொண்டிருந்தபோதே இந்தச் சம்பவம் இடம் பெற்றுள்ளது.

வகுப்பு முடிந்த பின்னர் தனது வீட்டுக்குச் சென்று கொண்டிருந்தபோது நீல நிற வேனில் வந்த முகமூடி அணிந்த குழு ஒன்று தன்னை வலுக்கட்டாயமாக வேனில் ஏற்றிச் செல்ல முற்பட்டதாகவும் அவர்களிடமிருந்து தான் தப்பி ஓடிவிட்டதாகவும் குறித்த மாணவன் தெரிவித்துள்ளான்.