கிருமி தாக்கத்தால் மகளை பறிகொடுத்த தாய்; கிராமமே கண்ணீர்விடும் சோகம்! (Video)

0
167
The dead woman's body. Focus on hand

மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனைப் பற்று பிரதேச சபைக்குப்பட்ட புதுக்குடியிருப்பு தெற்கு பகுதியில் அமைந்துள்ள அமலபுரம் கிராமத்தில் வசிக்கும் மக்கள் தமது பிரச்சினையை கண்ணீருடன் பகிர்ந்து கொண்டனர்.

அவர்கள் கூறுகையில், எமது கிராமத்தில் திண்மக்கழிவு முகாமைத்துவ நிலையம் ஒன்றை ஆரம்பித்தார்கள். இத்திட்டத்தை ஆரம்பிக்கும் போதே குப்பைகளைச் சேகரித்து அதனை உரமாக்கி விநியோகிப்பது எனவும், இதற்காக எமது கிராமத்தில் உள்ளவர்களுக்கும் வேலைவாய்ப்பு வழங்கப்படும் எனவும் எம்மிடம் கூறித்தான் இதனை ஆரம்பித்தார்கள்.

ஆனால் எமது கிராமத்தைச் சேர்ந்தவர்கள் யாருக்கும் அங்கு தொழில் இதுவரையில் வழங்கப்படவில்லை. நங்கள் இக்கிராமத்திற்கு வந்து 14 வருடங்கள் ஆகின்றன. குப்பைகளுடன் சேர்த்து இறைச்சிக்காக வெட்டப்படும் கோழி, ஆடு, மாடுகளின் கழிவுகளையும் கொண்டு வந்து கொட்டிக்கொண்டே இருந்துள்ளார்கள்.

இதனை நாங்கள் தற்போதுதான் கண்டு கொண்டோம். இந்த கழிவுகளைக் கொட்டும் இடத்திற்கும் எமது குடியிருப்புக்கும் இடையில் 100 மீற்றர் தூர இடைவெளிகூட இல்லை மிக அருகில் தான் அமைந்துள்ளது. இவ்வாறு குப்பைகளையும், மிருகங்களின் கழிவுகளையும் கொட்டுவதனால் எமது கிராமத்திலுள்ள மக்களுக்கு மிகுந்த நோய்களுக்கு உட்பட்டு வருகின்றார்கள் என குறிப்பிட்டுள்ளனர்.

இதனால் எமது கிராமத்தைச் சேர்ந்த பெண்மணி ஒருவரும் அண்மையில் உயிரிழந்துள்ளார் என குறிப்பிடுகின்றனர். உயிரிழந்த பெண்ணின் தாய் மிகவும் வேதனையுடன் தனது மகள் உயிரிழந்த விடயத்தை எம்முடன் பகிர்ந்து கொண்டார்.

இது தொடர்பான விரிவான தொகுப்பு காணொளியாக,