இலங்கையில் காதல் தோல்வியால் சீன பிரஜை ஒருவர் தற்கொலை முயற்சி!

0
199

காலியில் காதலி விட்டுச் சென்றமையினால் உயிரை மாய்க்க முயன்ற சீன பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

காலி, கலங்கரை விளக்கத்திற்கு அருகில் மதில் மீது ஏறி கடலில் குதித்து உயிரை மாய்க்க முயன்ற போது பொலிஸார் இவரை கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர் நீதிமன்றில் முன்னிலைபடுத்தப்பட்டதன் பின்னர் எதிர்வரும் 6 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

காதல் தோல்வியால் நபர் எடுத்த முடிவு | Decision Taken By A Person Due To Love Failure

33 வயதான ஹன்ஜின் என்ற இந்த சீன பிரஜை இலங்கைக்கு சுற்றுலா விஜயத்தில் ஈடுபட்டுள்ளார். அத்துடன் அவரது வீசா இரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தனது காதலி தன்னை கைவிட்டு சென்றமையினால் மனவேதனையில் தற்கொலை செய்ய முடிவு செய்ததாக சீன பிரிஜை பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.