கிளிநெச்சியில் அதிசக்தி வாய்ந்த யுத்தக்கால விமானக் குண்டு கண்டெடுப்பு..

0
184

கிளிநொச்சி- தர்மபுரம், மயில்வானகம் காட்டுப்பகுதியில் தாக்குதல் விமானத்தின் ஊடாக பூமியில் விழுந்த சுமார் 500 கிலோகிராம் நிறையுடைய அதிசக்தி வாய்ந்த விமானக் குண்டொன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.

யுத்தக்காலத்தில் பயங்கரவாதிகளை இலக்கு வைத்து கிபீர் விமானத்தால் கீழே வீசப்பட்ட வெடிக்காத குண்டே இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

15 வருடங்களுக்கு முன்னர் வீசப்பட்ட குண்டு

பிரதேசவாசியினால் தர்மபுரம் பொலிஸ் பொறுப்பதிகாரிக்கு கிடைத்த தகவலை அடுத்து இந்த சக்திவாய்ந்த குண்டு கண்டறியப்பட்டள்ளது.

இந்த குண்டு 3 அடி நீளமும், 3 அடி சுற்றுவட்டமும் கொண்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுமார் 15 வருடங்களுக்கு முன்னர் பூமியை நோக்கி வீசப்பட்டுள்ளதாகவும் பூமிக்கு அடியில் அக்குண்டு பதிந்தமையால், இரும்புக்கரல் பிடித்துள்ளது என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.