சிங்கப்பூர் வீதியில் நிர்வாணமாக படுத்து இருந்த நபர்..

0
165

சிங்கப்பூரில் செம்பவாங்கில் வீதி ஒன்றில் நபர் ஒருவர் நிர்வாணமாக படுத்து இருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வெள்ளிக்கிழமை Sgfollowsall என்ற இன்ஸ்டகிராம் பக்கத்தில் இது தொடர்பில் வெளியான ஒரு காணொளி ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.

இதனையடுத்து 34 வயது நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

செம்பவாங் ரோட்டில் வெள்ளிக்கிழமை அதிகாலை 2.40 மணிக்கு உதவி கேட்டு தனக்குத் தகவல் வந்ததாக பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் விசாரணை நடந்துவருகிறது. பொது இடத்தில் நிர்வாணமாக தோன்றியதன் தொடர்பில் யாராவது குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டால் அவருக்கு மூன்று மாத சிறையும் , 2,000டொலர் வரை அபராதம் அல்லது இரண்டும் விதிக்க முடியும் எனவும் கூறப்படுகின்றது.