ஜேர்மனில் உள்ள கயில்புறோன் கந்தசாமி கோயில் மீது தாக்குதல் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதேவேளை, அந்த ஆலயத்தில் தமிழில் பூசை இடம்பெறவேண்டும் என்ற முடிவு எடுக்கப்பட்டு, சில நாட்களில் செந்தமிழ் குடமுழுக்கு இடம்பெறவிருந்த நிலையிலேயே இந்த கோவில் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
சமஸ்கிருதத்திலேயே பூசை இடம்பெறவேண்டும் என்றும், நீஷபாஷயான தமிழில் கடவுளுக்கு வழிபாடு இருக்கக்கூடாது என்று செயற்படுவோரின் வேலைதான் இது என்று குற்றம் சுமத்தப்படுகின்றது.
குறித்த தாக்குதல்கள் அவர்களின் தூண்டுதலின் பெயரிலேயே நடாத்தப்பட்டிருக்கலாம் என்று ஆலய நிர்வாகத்தினர் கூறுகின்றார்கள்.
கயில்புறோன் கந்தசாமி கோவிலில், அங்குள்ள தெய்வ விக்கிரகங்களுடன் கார்த்திகைப்பூ சுருவம் ஒன்றும் வைக்கப்பட்டு வழிபாடு நடைபெற்று வருகின்மை குறிப்பிடத்தக்கது.