குழந்தைகளுடன் காணாமலாக்கப்பட்ட தமிழீழ விளையாட்டுத்துறை பொறுப்பாளர்!

0
481

தமிழீழ விளையாட்டுத்துறைப் பொறுப்பாளராக இருந்தவர் ராஜா. இவர் இறுதி யுத்தம் என்ற பெயரில் இலங்கை அரசு செய்து முடித்த இனவழைப்பின் உச்ச நாளில் குழந்தைகளோடு வட்டுவாகல் பகுதியில் வைத்து இலங்கை இராணுவத்தினரிடம் சரணடைந்த பின் குழந்தைகளுடன் வலிந்து காணாமலாக்கப்பட்டார்.

அவரின் துணைவி இசைவிழி செம்பியன் என்று, புலிகளின் குரல் மூலமாக தினமும் மக்களோடு மக்களுக்காக உறவாடுபவர். இருவருக்கும் மூன்று குழந்தைகள். 2007 ஆம் ஆண்டு புலிகளின் குரல் வளாகம் மீது நடாத்தப்பட்ட வான்படைத் தாக்குதலில் தன் உயிரை அர்ப்பணித்த இசைவிழிக்கு அப்போது 1 வயதுக் குழந்தை உட்பட மூன்று மகன்கள் இருந்தனர்.

விடுதலைக்காக இருவரும் போராட்டிக் கொண்டிருந்த நேரத்தில் இசைவிழி செம்பியனின் மரணம் ராஜா அவர்களை பெரிதும் பாதித்தது.

குழந்தைகளுடன் காணாமலாக்கப்பட்ட தமிழீழ விளையாட்டுத்துறைப் பொறுப்பாளர்! | Tamil Eelam Sports Official Missing With Children

கால நகர்வில் விடுதலைப் போராட்டம் திட்டமிட்டு சர்வதேச சமூகத்தால் முள்ளிவாய்க்காலில் மௌனக்க வைக்கப்பட்ட போது பிள்ளைகளுக்காக இராணுவத்தினரிடம் சரண்டந்த ராஜா அவர் இன்று எங்கே என்று தெரியவே இல்லை.

அவருடன் மூன்று குழந்தைகளும் காணாமல் ஆக்கப்பட்டார்கள் என்று சொல்கின்றார்கள். அப்படி யாரும் இல்லை என அன்று ஒரு நாள் சிங்கள இராணுவத்தளபதி கூறியது நினைவுக்கு வந்து நெஞ்சை உருக்குகிறது.

இந்த சின்ன குழந்தைகள் என்ன தான் பாவம் செய்தார்கள் எம் தாயகத்தில்? இவ்வாறான நிலையை அடைந்ததற்கு என்னை பொறுத்தவரை விடுதலையை விரும்பிய இருவரின் பிள்ளைகளாக பிறந்ததைத் தவிர என முகநூலில் Ratnam Kavimahan என்பவர் குறித்த பதிவை ஈட்டுள்ளார்.