கதிர்காமத்திற்கும் சைவத் தமிழர்களுக்கும் இடையிலான கடைசித் தொடர்பு துண்டிக்கப்படுகின்றதா?

0
610

கதிர்காமத்திற்கும் சைவத் தமிழருக்கும் இடையில் இருந்த கடைசித் தொடர்பும் அறுக்கப்படுகின்றதா? என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.

தமிழருக்கும் கதிர்காமத்திற்கும் இருக்கும் தொடர்பு துண்டிக்கப்படுகின்ற நிகழ்வு இந்த ஆண்டில் அரங்கேற்றப்பட்டுள்ளது. இந்நிலையில் குறிப்பாக கதிர்காமத்தின் கொடியேற்றம் பஞ்சாங்கத்தில் சொல்லப்பட்ட நாளான 18.07.2023 திகதி அன்றே நடைபெற வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் இந்த நாள் ஒரு மாதம் முன்னகர்த்தப்பட்டு எதிர்வரும் 19.06.2023 அன்று கதிர்காமத்தின் கொடியேற்றம் என கதிர்காம நிர்வாகத்தினால் அறிவிக்கப்பட்டு அதற்கான அனைத்து ஏற்பாடுகளும் நிறைவு பெற்றுள்ளன.

கதிர்காமத்திற்கும் சைவத் தமிழருக்கும் இடையில் இருந்த கடைசித் தொடர்பும் அறுக்கப்படுகின்றதா? | The Last Connection Kathirgama And Saivite Tamils

எசலப் பெரகரா முடிவடையும் நாளில் கதிர்காமத் திருவிழா ஆரம்பமானால் நாட்டுக்கு நல்லது நடக்கும் என்ற காரணத்தினால் இது மாற்றப்பட்டதாகச் சொல்லப்படுகின்றது. இந்த மாற்றத்திற்கு எந்தவித எதிர்ப்பும் மறுப்பும் சைவத்தமிழர் தரப்பில் இருந்து எழாதநிலையில் திருவிழாவிற்கு கன்னிக்கால் நாட்டும் நிகழ்வு 05.05.2023 அன்று நடைபெற்றுள்ளது.

முருகன் தமிழ்க்கடவுள் என்று நாம் சொன்னாலும், கதிர்காமம் எமது ஆதி முருகன் ஆலயம் என நாம் கொண்டாடினாலும் அது தமிழ்க் கலாசாரம், சைவ சமய வழிபாட்டு முறைகள், பாரம்பரியங்களில் இருந்து விலகிச் சென்று ஆண்டுகள் பலவாகிவிட்டது.

கதிர்காமத்திற்கும் சைவத்தமிழருக்கும் இடையிலான உரிமை பறிக்கப்பட்டிருந்தா?

இதன்போது கொடியேற்றம் பள்ளிவாசலில் நடைபெறுகின்றது, தொன்மையான ஆலயமும் பூசைகளும் நிலமேகளின் பிடியில், சுவாமி ஊர்வல வழிபாடுகள் பெரகரா ஆகிவிட்டது. எது மாறினாலும், மாற்றப்பட்டாலும் ஆடிவேல் விழா, கதிர்காமக்கொடி, கதிர்காமத் தீர்த்தம் என்பன தமிழ் பஞ்சாங்கத்தில் மற்றும் நாட்காட்டிகளில் காட்டப்படும் வகையில் ஆடிவேல் விழாவாக சொல்லப்படும் நாளில் நடைபெறுகின்றது.

இது மட்டுமே கதிர்காம முருகனுக்கும் சைவத் தமிழருக்கும் இடையில் உள்ள ஒரே தொடர்பாகும். கதிர்காமத்திற்கும் சைவத்தமிழருக்கும் இடையிலான உரிமை பறிக்கப்பட்டிருந்தாலும் அவர்களது வழிபாட்டுமுறைகள் மாறிவிடவில்லை.

செல்வச்சந்நிதியில் இருந்து வேல்நடை, நாடுமுழுவதும் இருந்து முருகனடியவர்களின் பாதடை வழிபாடு, உகந்தை தொடக்கம் கதிர்காமம் வரையான காட்டுப்பயணப் என மிகக் கடுமையான பத்தியுடன் கூடிய வழிபாடுகளை செய்துவருகின்றனர். ஆனால் பிற சமயத்தவருக்கு அது களியாட்டமாகவே இருக்கின்றது.

இவ்வாறு இருக்கையில் சைவத்தமிழரின் நம்பிக்கையினை உடைத்து பிறிதொருநாளில் கதிர்காமக்கந்தன் கொடியை அறிவித்து திருவிழாவை நிகழ்த்துவது மிக மோசமான விடயமாகும். கடவுள் நம்பிக்கை மற்றும் வழிபாட்டுமுறைகளுக்கு விரோதமானதும் ஆகும்.

கதிர்காமத்திற்கும் சைவத் தமிழருக்கும் இடையில் இருந்த கடைசித் தொடர்பும் அறுக்கப்படுகின்றதா? | The Last Connection Kathirgama And Saivite Tamils

அதன்படி சமகாலத்தில் வடக்கு கிழக்கில் அசுரவேகத்தில் நிகழும் பௌத்த ஆக்கிரமிப்பின் ஒரு அங்கமாகவே கதிர்காம கொடியேற்ற நாள் மாற்றப்பட்டதும் இருக்கின்றது. ஈழத்தில் தொன்மையானவை தமிழருக்குச் சொந்தமானதாக இருக்கக்கூடாது என்பதில் குறியாக இருக்கின்றனர்.

இந்த சமய வழிபாட்டு வழமை மாற்றலை சைவ அமைப்புகள், கலாசாரத்திணைக்களம், முருகனடியவர்கள் அனைவரும் இணைந்து தமது எதிர்ப்பைப் பதிவு செய்யவேண்டும். இவ்வாண்டு இது ஆரம்பிக்கப்பட்டு விட்டது.

ஆனால் எதிர்காலத்தில் வழமைபோன்று பஞ்சாங்கத்தில் உள்ளவாறு நடத்த வேண்டும் எனும் கோரிக்கையினை அனைவரும் வலியுறுத்த வேண்டும். முன்னர் ஒரு தடவை மாற்ற முனைந்த நிலையில் மக்களின் எதிர்ப்பால் அம்முயற்சி கைவிடப்பட்டதாக வரலாறு கூறுகிறது.