ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்!

0
387

ஜப்பானில் இன்று 6.3 ரிக்டர் அளவிலான பாரிய பூகம்பம் ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இஷிகவா பிராந்தியத்தில் 10 கிலோமீற்றர் ஆழத்தில் இந்த பூகம்பம் ஏற்பட்டுள்ளதாக ஜப்பானிய வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இப்பூகம்பத்தையடுத்து சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை.