கடலில் பேனா சிலை அமைக்க அனுமதி; சீமான் கண்டனம் !

0
590

கடலில் முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதியின் நினைவாக பேனா சிலை அமைக்க மத்திய அரசு அனுமதி வழங்கிய நிலையில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.

பேனா சின்னத்திற்கு அனுமதி 

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நினைவாக பேனா நினைவு சின்னம் அமைக்க அனுமதி வழங்க வேண்டும் என மத்திய அரசுக்கு தமிழக பொதுப்பணித்துறை கடிதம் அனுப்பியது .

இந்த நிலையில் பேனா நினைவு சின்னம் சில நிபந்தனைகளுடன் மத்திய அரசின் நிபுணர் மதிப்பீடு குழு அனுமதி கொடுத்துள்ளது.

இந்த நிலையில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில்,

கொந்தளிக்கும் சீமான் 

கடலில் பேனா நினைவுச் சின்னம் அமைப்பதற்கு விதிகளுக்குப் புறம்பாக ஒன்றிய நிபுணர் குழுவினர் அனுமதி அளித்திருப்பது மக்களாட்சி முறைக்கு எதிரான செயல். சூழலியலுக்கு எதிரான மாநில அரசின் இத்திட்டத்திற்கு ஒன்றிய அரசின் குழு விரைந்து அனுமதி அளித்துள்ளது அவர்களின் ஒருங்கிணைந்த மக்கள் விரோதப் போக்கினைக் காட்டுகிறது.

Permit to set up pen statue in sea - Seeman Turbulent

மக்கள் கருத்துக் கேட்புக் கூட்டம் முறையாக நடைபெறவில்லை என்பதனைக் எடுத்துக் கொள்ளாது அனுமதி வழங்கப்பட்டிருப்பது மக்களின் கருத்தினை ஒன்றிய, மாநில அரசுகள் துளியும் மதிப்பதில்லை என்பதனை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. மக்கள் விரோத – சூழலியல் விரோத இத்திட்டத்தினை எதிர்த்து அடுத்ததாக நாம் தமிழர் கட்சி சட்டப் போராட்டம் முன்னெடுக்க உள்ளது என்று அறிவிக்கிறேன். என்று தெரிவித்துள்ளார்.